விடுதலை 2 படத்தில் இடம்பெற்றுள்ள தினம் தினமும் உன் நினைப்பு பாடல் இன்று (நவம்பர் 17) வெளியானது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், கெளதம் மேனன், பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் நடித்துள்ள படம் விடுதலை. இளையராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தை ஆர்.எஸ்.இன்ஃபோடைன்மென்ட் மற்றும் கிராஸ் ரூட்ஸ் தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
இரண்டு பாகங்களாக தயாராகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியானது. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது. சூரி இப்படத்தில் போலீஸ் கான்ஸ்டபிளாகவும், விஜய் சேதுபதி மக்கள் படை என்கிற போராளி குழுவின் தலைவராகவும் நடித்திருந்தனர்.
விடுதலை படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து விடுதலை 2 படம் தற்போது ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. வரும் டிசம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. முன்னதாக ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் விடுதலை 2 திரையிடப்பட்டது. படம் முடிந்து ஐந்து நிமிடத்திற்கும் மேலாக ரசிகர்கள் எழுந்து நின்று படத்தை கைத்தட்டி கொண்டாடினர்.
இந்தநிலையில், விடுதலை படத்தில் இடம்பெற்றுள்ள தினம் தினமும் உன் நினைப்பு பாடல் இன்று வெளியாகியுள்ளது. இளையராஜா குரலில் மெலோடி பாடலாக இது வந்துள்ளது. விடுதலை 1-ல் இடம்பெற்ற வழிநெடுக காட்டுமல்லி பாடலின் சாயலாக இப்பாடல் இருப்பதாக ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சென்னை பீச் – தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து… கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
விருதுநகர்: பசியோடு வீட்டுக்குள் நுழைந்த பெரியவரை கம்பத்தில் கட்டிவைத்த அவலம்!