வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, கௌதம் மேனன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் ‘விடுதலை’. பிரபல எழுத்தாளர் ஜெயமோகனின் சிறுகதையை மையமாக கொண்டு உருவான விடுதலை படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார்.
விடுதலை படத்தின் இறுதியில் விடுதலை 2 படத்திற்கான காட்சிகள் இடம்பெறும். இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, விடுதலை 2 படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடங்கப்பட்டது.
விடுதலை 1 பாகம் எடுக்கும் போதே, இரண்டாம் பாகத்திற்கு தேவைப்படும் சில காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டதால் விடுதலை இரண்டாம் பாகம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் விடுதலை 2 படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இக்காரணத்தினால் ஜனவரி மாதம் வெளியாக வேண்டிய விடுதலை 2 படம், 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு தான் ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைப்பு: காரணம் இதுதான்!
செந்தில் பாலாஜிக்குக் காவல் நீட்டிப்பு : அமலாக்கத் துறைக்கும் உத்தரவு!