வெற்றிமாறன் – விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள விடுதலை 2 படம் இன்று வெளியானது.
விஜய்சேதுபதி நடித்துள்ள விடுதலை 2 படத்துக்கு தமிழ்நாட்டில் இன்று ஒரு நாள் மட்டும் சிறப்பு காட்சி அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு திரையிடப்பட்டது.
விடுதலை முதல் பாகத்தில் சூரி பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க வாத்தியார் என்ற முக்கியத்துவமான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்தார். விடுதலை இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியின் வாத்தியார் பின்னணி கதையை சொல்லும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.
விடுதலை படம் நன்றாக வந்திருப்பதாக ரசிகர்கள் பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர். முதல் 30 நிமிடங்கள் பக்காவாக இருப்பதாகவும் ரசிகர்கள் பதிவுகள் சொல்கின்றன. கங்குவா படம் முதல் 30 நிமிடங்கள் சரியில்லாததால் தோல்வியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
விடுதலை 2 படத்தின் க்ளைமாக்ஸ் சூப்பராக உள்ளது. இந்த படத்தை தியேட்டரில் பார்ப்பது மிக சிறப்பான அனுபவமாக இருக்கும். அதுவும் இளையராஜாவின் இசை சூப்பரோ சூப்பர். பல காட்சிகள் தத்துரூபமாக இருக்கு. படம் நிச்சயம் பிளாக் பஸ்டர் தான் என்று ரசிகர் ஒருவர் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே , விடுதலை 2 படம் வெளிநாடுகளிலும் ரிலீஸ் ஆகியுள்ளது. படம் வெளியான சில மணி நேரங்களிலேயே இணையத்தளங்களில் லீக் ஆகியுள்ளது.
தமிழ்நாட்டில் முதல் ஷோ திரையிடுவதற்கு முன்பே படம் ஆன்லைனில் படம் வெளியாகியிருப்பது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.டெலிகிராம் செயலி, தமிழ் ராக்கர்ஸ், மூவிரூல்ஸ் போன்ற இணையத்தளங்களில் படத்தின் பல்வேறு பிரிண்ட் வெர்ஷன்களின் டவுண்லோடு லிங்குகள் உள்ளன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
நகை வாங்க நல்ல சான்ஸ்… மூன்றாவது நாளாக குறைந்த தங்கம் விலை!
ராகுல் எங்கே நின்றார் தெரியுமா?: வீடியோ வெளியிட்டு ஜோதிமணி விளக்கம்!