நடிகை நயன்தாராவின் பிறந்தநாளான இன்று (நவம்பர் 18) நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘பியாண்ட் தி ஃபேரிடேல்’ என்ற பெயரில் அவரது டாக்குமெண்ட்ரி வெளியானது. நயன்தாராவின் சினிமா பயணம், காதல், திருமணம் இதெல்லாம் குறித்து அந்த டாக்குமெண்ட்ரியில் இடம்பெற்றுள்ளது.
இயக்குநர் விக்னேஷ் சிவனுடனான காதல் மலர்ந்த படம் ‘நானும் ரெளடிதான்’. அதில் இடம்பெற்றிருக்கும் சில காட்சிகள், பாடல்கள் ஆகியவற்றைப் பயன்படுத்த படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் அனுமதி அளிக்கவில்லை. மேலும், ரூ.10 கோடி கேட்டதாகவும் நயன்தாரா தனுஷ் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த நிலையில், நயன்தாரா பற்றி நடிகர் தனுஷ் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் நயன்தாராவை தங்களது தோழி என்று தனுஷ் கூறுகிறார். மேலும், எதிர் நீச்சல் படத்தில் தாங்கள் கேட்டுக் கொண்டதற்காக ஒரு பாடலுக்கு வந்து ஆடி கொடுத்தார்.
#Nayanthara didn’t even take money for dancing in the movie #Dhanush production Ethir Neechal. Even she can demand atleast 2-3 crores for that song #Dhanush #Amaran pic.twitter.com/RTVNMZ19m9
— VRsamy (@Veerasamy100) November 16, 2024
அதற்கு அவர் பணம் கூட பெறவில்லை என்று தனுஷ் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். மேலும், அவர் நினைத்தால் 2,3 கோடி கூட எங்களிடம் இருந்து வாங்கியிருக்கலாம் என்றும் தனுஷ் கூறியுள்ளார். அந்த வீடியோவில் எதிர் நீச்சல் படத்தின் ஹீரோ சிவகார்த்திகேயனும் தனுசுடன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2013 ஆம் ஆண்டு எதிர்நீச்சல் படம் வெளியானது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்திருந்தார்.
இந்த விவகாரத்தில் நயன்தாராவுக்கு ஆதரவாக ராணா டகுபதி, நாகார்ஜுனா, உபேந்திரா, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் பேசியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
#IStandByDhanush…டிரெண்டாகும் ஹேஸ்டேக்… நயனுக்கு வலுக்கும் எதிர்ப்பு!