“விடாமுயற்சி” கலை இயக்குனர் மறைவு: சோகத்தில் படக்குழு!

சினிமா

நடிகர் அஜித் குமார் நடிப்பில் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் விடா முயற்சி. இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் கலை இயக்குனராக பணியாற்றி வந்த மிலன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

கலை இயக்குனர் மிலன் விடாமுயற்சி படத்திற்கு முன்பாகவே அஜித் நடிப்பில் வெளியான பில்லா,வீரம்,வேதாளம் உள்ளிட்ட படங்களுக்கும் கலை இயக்குனராக பணியாற்றியவர்.

மேலும் 2011-ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான வேலாயுதம் படத்திற்கும் கலை இயக்குனராக மிலன் தான் பணியாற்றி இருந்தார்.

கலை இயக்குனர் மிலன் உயிரிழப்பு குறித்து வெளியான தகவலின் படி, விடாமுயற்சி படப்பிடிப்பிற்காக இன்று காலை ஷூட்டிங் வேலைகள் குறித்து தனது குழுவிடம் மிலன் பேசிக்கொண்டு இருந்தபோது, உடல்நிலை சரியில்லாதது போல் அவர் உணரத் தொடங்கியதாகவும், உடனே அவர் உடல் முழுவதும் வியர்த்து விட்டதாகவும் கூறப்படுகிறது. அதன் பிறகு அங்கிருந்த புரொடக்ஷன் குழு அவரை ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்று விட்டனராம்.

இந்த தகவலை கேள்விப்பட்ட அஜித்தும் படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி மற்றும் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்தார்கள் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அவர்கள் மருத்துவமனையை அடைவதற்கு முன்பே மிலன் உயிரிழந்து விட்டார் என்று சொல்லப்படுகிறது.

கலை இயக்குனர் மிலன் அவர்களின் உயிரிழப்பு படக் குழுவினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

– கார்த்திக் ராஜா

வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!

இன்ஃப்ளூயன்சர்களுக்கு வரமாக வந்த சோனி விலாக் கேமரா!

ஜெய் ஸ்ரீராம் விவகாரம்: உதயநிதிக்கு அண்ணாமலை பதிலடி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *