Vettaiyan The Goat Vidaa Muyarchi Kanguva

வேட்டையன், விடாமுயற்சி, GOAT, கங்குவா படங்களின் ரிலீஸ் எப்போது?

சினிமா

இந்த ஆண்டில் இதுவரை முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், வரும் மாதங்களிலும் பெரிய படங்கள் ரிலீஸ் ஆக வாய்ப்புகள் இல்லை என்றே தெரிகிறது.

2024-ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளதால் படங்களின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் தள்ளி வைக்கத்தொடங்கி இருக்கின்றனர்.

குறிப்பாக ரஜினி, அஜித், விஜய், சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வேட்டையன்’, ‘விடாமுயற்சி’,’ GOAT’, ‘கங்குவா’ படங்கள் இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில் தான் வெளியாக வாய்ப்புகள் இருக்கின்றனவாம்.

அந்த வகையில் மேற்கண்ட படங்கள் எப்போது வெளியாக வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை கீழே பார்க்கலாம்.


வேட்டையன்

‘ஜெயிலர்’, ‘லால் சலாம்’ படங்களுக்குப்பிறகு ரஜினிகாந்த் தற்போது தன்னுடைய 17௦-வது படமான வேட்டையனில் நடித்து வருகிறார்.

‘ஜெய்பீம்’ புகழ் ஞானவேல் இயக்கி வரும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தை லைகா நிறுவனம் மிகப்பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. தற்போது படத்தின் 80% படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது.

லேட்டஸ்ட் நிலவரத்தின்படி ‘வேட்டையன்’ படம் வருகின்ற தீபாவளிக்கு வெளியாகும் என நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Vettaiyan The Goat Vidaa Muyarchi Kanguva

 

விடாமுயற்சி

அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இதில் அஜித்துடன்  இணைந்து அர்ஜுன், ஆரவ், திரிஷா, ரெஜினா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

பிரமாண்ட பொருட்செலவில் லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். தற்போது படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

முன்னதாக அஜித் பிறந்தநாளில் இப்படம் வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது தள்ளிப்போய் இருக்கிறதாம். அதன்படி பக்ரீத் அல்லது சுதந்திர தினத்தில் படம் திரைக்கு வர வாய்ப்புகள் இருக்கின்றன.

Vettaiyan The Goat Vidaa Muyarchi Kanguva

The Greatest Of All Time Vettaiyan The Goat Vidaa Muyarchi Kanguva

‘GOAT’ திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து மீனாட்சி சௌத்ரி, பார்வதி, யோகிபாபு, சினேகா, லைலா, வைபவ், நிதின் சத்யா, பிரேம்ஜி, மோகன், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், ஜெயராம், கஞ்சா கருப்பு, விடிவி கணேஷ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் ‘GOAT’ படத்திற்கு, யுவன் இசையமைத்து வருகிறார். தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முதலில் பக்ரீத் ஸ்பெஷலாக வெளியாகும் என கூறப்பட்ட இப்படம் தற்போது தீபாவளியைக் குறிவைத்துள்ளதாக தெரிகிறது.

Vettaiyan The Goat Vidaa Muyarchi Kanguva

கங்குவா

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடித்திருக்கும் ‘கங்குவா’ படத்தில், அவருக்கு ஜோடியாக திஷா பதானியும் வில்லனாக பாபி தியோலும் நடித்து வருகின்றனர்.

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இப்படத்தில் சூர்யா 6 கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது ‘கங்குவா’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் விஎப்எக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வருகின்ற ஆகஸ்ட் மாதம் இப்படம் உலெகங்கும் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அநேகமாக சுதந்திர தினத்தில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை சுதந்திர தினத்திலும் வெளியாகவில்லை எனில் விநாயகர் சதுர்த்தியை படக்குழு குறி வைக்கலாம்.

மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

குக் வித் கோமாளி ஷோவில் இருந்து விலகும் பிரபல செஃப்!

முன்னாள் அமைச்சர் வளர்மதி மீதான வழக்கு விசாரணைக்கு தடை!

Vettaiyan The Goat Vidaa Muyarchi Kanguva

+1
2
+1
2
+1
1
+1
10
+1
2
+1
3
+1
3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *