தமிழ் சினிமா சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மாஸாக வெளிவர உள்ள படம் வேட்டையன். ஞானவேல் இயக்கத்தில் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் வரும் அக்டோபர் 10 – ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இப்படத்தில் அமிதாப்பச்சன், பஹத் பாசில், மஞ்சு வாரியர் என பலர் நடித்துள்ளனர். தற்போது, டிரைலரும் வெளியாகியுள்ளது. டிரைலரில் வில்லனை சுட ஒரு வாரம் அதிகம், 3 நாட்கள் போதும் என்று நடிகர் ரஜினிகாந்த் பேசும் பஞ்ச் வசனமும் அசத்தலாக இருக்கிறது.
ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் இருவரும் இணைந்து 34 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தில் இணைந்துள்ளனர். அதோடு அமிதாப் பச்சன் நேரடியாக நடிக்கும் முதல் தமிழ் திரைப்படமாக வேட்டையன் அமைந்துள்ளது.
முன்னதாக கடந்த 1983 ஆம் ஆண்டு அந்தா கானுன் மற்றும் 1991 ஆம் ஆண்டு வெளியான ஹம் ஆகிய படங்களில் ரஜினிகாந்த், அமிதாப் இணைந்து நடித்திருந்தனர். இந்த இரு படங்களுமே இந்தி படங்கள் ஆகும்.
படத்தின் புரொமோஷன்கள் அட்டகாசமாக நடந்து முடிய ப்ரீ புக்கிங்கும் சிறப்பாக போய் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் ப்ரீ புக்கிங் மட்டுமே 8.2 கோடி ரூபாய் கலெக்சனை எட்டியுள்ளது.
இந்த நிலையில் வெளிநாடுகளில் இதுவரை ரிலீஸ் ஆகாத ஒரு நாட்டில் ரஜினியின் முதல் படமாக வேட்டையன் வெளியாகவுள்ளது. தென்கொரியாவில் சியோலில் உள்ள திரையரங்கத்தில் முதன்முறையாக ரஜினியின் படம் ரிலீஸ் ஆகிறதாம், வரும் அக்டோபர் 13ம் தேதி வேட்டையன் அங்கு ரிலீஸ் ஆகிறதாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
கம்போடியாவில் மோசடி வேலை… அதிரடியாக 67 இந்தியர்கள் மீட்பு!
பிரேக் பிடிக்காமல் உயர்ந்து வரும் தங்கம் விலை!