ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘வேட்டையன் ‘ திரைப்படம் வரும் அக்டோபர் 10-ஆம் தேதி வெளியாகும் என அப்படக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது.
‘ஜெய் பீம்’ திரைப்படத்தின் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் , பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ வேட்டையன் ‘ . இந்தத் திரைப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்தத் திரைப்படம் நடிகர் சூர்யா நடிப்பில், பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள ‘ கங்குவா ‘ திரைப் படத்துடன் திரைக்களத்தில் களமிறங்கவுள்ளதாக ஏற்கனவே சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டது. இந்த நிலையில், தற்போது இந்தப் படம் ‘ கங்குவா ‘ திரைப்படம் வெளியாகும் அக்டோபர் 10-ஆம் தேதி வெளியாகும் என அப்படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கடும் போட்டி நிலவும் எனத் திரைத்துறை வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிக்கும் முதல் தமிழ் திரைப்படம் இதுவே ஆகும். ரஜினிகாந்த் – அமிதாப் பச்சன் ஏறத்தாழ 33 ஆண்டுகள் கழித்து இணைந்து நடிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடைசியாக இவர்கள் இணைந்து நடித்த திரைப்படம் 1991 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான ‘ ஹம் ‘.
லைகா புரொடக்ஷன் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க, எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
நீதிமன்றத்தில் ஆ.ராசா ஆஜர் : அமலாக்கத் துறைக்கு உத்தரவு!
முல்லை பெரியாறு அணை: பீதியை கிளப்பிய சுரேஷ் கோபி… செல்வப்பெருந்தகை கண்டனம்!
ஐ போனுக்காக 3 நாட்கள் பட்டினி … கட்டு கட்டாக பணத்துடன் வந்த பூ விற்கும் பெண்!