‘மனசிலாயோ’ … ‘வேட்டையன்’ முதல் சிங்கிள் கம்மிங்!
ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘வேட்டையன்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் குறித்த தகவலை அப்படக்குழு அறிவித்துள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் வரும் அக்டோபர் 10-ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் ‘ வேட்டையன் ‘ . இந்தத் திரைப்படத்தை ‘ ஜெய் பீம் ‘ திரைப்படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கியுள்ளார்.
அனிருத் இந்தப்.படத்திற்கு இசையமைத்துள்ளார். பஹத் ஃபாசில், அமிதாப் பச்சன், ராணா , மஞ்சு வாரியர் போன்ற நடிகர்கள் இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
#Manasilayo #Vettaiyan song comin soon ????????????????#HunterVantaar
— Anirudh Ravichander (@anirudhofficial) August 20, 2024
இந்த நிலையில், தற்போது இந்தப் படத்தின் முதல் சிங்கிள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘மனசிலாயோ’ என்கிற இந்த பாடல் ரிலீஸுக்கு தயார் நிலையில் உள்ளது என இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இப்பாடல் வெளியாகும் தேதி குறித்த எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.
அமிதாப் பச்சன் நடிக்கும் முதல் தமிழ் படமான இந்தப் படத்தில் 33 ஆண்டுகள் கழித்து ரஜினியுடன் சேர்ந்து நடிக்கிறார். மேலும், பஹத் ஃபாசில் உட்பட இந்திய திரையுலகைச் சேர்ந்த பல முக்கிய நடிகர்கள் இந்தப் படத்தில் நடிப்பது ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
போகிற போக்கில் சொன்ன வார்த்தை… மனிதரை குரங்காக மாற்றிய போலி செய்தி!
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: தேசிய பணிக்குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம்!