வெற்றிமாறனின் ‘விடுதலைக்கு’ எப்போது விடுதலை?

சினிமா

விஜய்சேதுபதி, சூரி, கிஷோர் மற்றும் பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிக்கும் விடுதலை படத்தின் படப்பிடிப்பை இரண்டு வருடங்களாக நடத்தி வருகிறார் இயக்குநர் வெற்றிமாறன்.

இசையமைப்பாளராக இளையராஜா பணிபுரிந்து வருகிறார். ஆர் எஸ் இன்போடெயிட்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் வேலைகள் தொடங்கும்போது 60 நாட்களில் படப்பிடிப்பு முடிந்துவிடும் என கூறப்பட்டது.

ஆனால் படப்பிடிப்பு நாட்கள் அதிகரித்துக்கொண்டு போனது மட்டுமின்றி புதிய புதிய நடிகர்களும் படத்துக்குள் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு வந்தனர்.

இதனால் படத்தின் தயாரிப்பு செலவு அதிகரித்து வந்தது. எந்த முடிவுக்கும் வர முடியாமல் தயாரிப்பாளர் கையை பிசைய தயாரிப்பு செலவை ஈடுசெய்ய விடுதலை படத்தை இரண்டு பாகங்களாக்கிக் கொடுக்கிறேன் என்று வெற்றிமாறன் உறுதியளித்தார்.

இதன் காரணமாக ஆகஸ்ட் மாதம் வெற்றிமாறன் பிறந்தநாள் அன்று விடுதலை படம் இரண்டு பாகங்களாகத் தயாராகின்றன என்று அறிவிக்கப்பட்டது.

ஒரு வழியாக இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்று கூறப்பட்டதால் தயாரிப்பு தரப்பு நிம்மதி பெருமூச்சு விட்டது. 

ஆனால், இன்னும் 30 நாட்களுக்கு படப்பிடிப்பு நடத்த வேண்டும். அதற்கான வேலைகளைச் செய்யுமாறு  தயாரிப்புத் தரப்புக்கு இயக்குநர் வெற்றிமாறன் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனை கேட்ட தயாரிப்பாளர் தரப்பினர், அடுத்த கட்டப் படப்பிடிப்புக்கான வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார்களாம்.

விடுதலை படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் நடிகர்கள் வேறுபடங்களில் நடிக்க தேதி ஒதுக்கீடு செய்ய முடியாத நிலையில் தடுமாறி வருகின்றனர்.

விக்ரம்பிரபு நடிப்பில் ஏப்ரல் மாதம் ஒடிடியில்  டாணாக்காரன் படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தை இயக்கிய தமிழ் விடுதலை படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

டாணாக்காரன் படம் வெளியான பின்பு அப்படத்தை தயாரித்த  டீரீம் வாரியார் நிறுவனம் தமிழ் இயக்கத்தில் புதிய படமொன்றை இயக்க ஒப்பந்தம் செய்தது.

விடுதலை முடிந்தால்தான் இயக்குநர் வேலையை தொடங்க முடியும் என்பதால் பிரபல நடிகர் நடிக்கும் புதிய பட வேலைகளை தொடங்க முடியாமல் இயக்குநர் தமிழ் விடுதலை படத்தால் முடங்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

விடுதலை படப்பிடிப்பு முடிந்தால் அந்தப் படத்தில் நடித்து வரும் திரைக்கலைஞர்களுக்கும் விடுதலை கிடைக்கும்.

இராமானுஜம்

செந்தில் பாலாஜியை விமர்சிக்க தடை!

பேருந்து, ரயில், மெட்ரோ பயணத்துக்கு ஒரே சீட்டு: புதிய ஏற்பாடு!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.