”சூர்யாவுடன் என்ன பிரச்சனை?”: அமீரிடம் நேரடியாக கேட்ட வெற்றிமாறன்

Published On:

| By christopher

vetrimaran enquires about fight between suriya and ameer

இயக்குநர் அமீர் தனது அமீர் பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் தயாரித்திருக்கும் படம் மாயவலை. fight between suriya and ameer

ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் சஞ்சனா ஷெட்டி, சரண், தீனா, சத்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் அமீர் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மாயவலை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

மாயவலை படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (நவம்பர் 5) சென்னையில் நடைபெற்றது. பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் அமீர், வெற்றிமாறன், சத்யா, சஞ்சிதா ஷெட்டி, சினேகன், தீனா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

படத்தை வெளியிடும் இயக்குநர் வெற்றிமாறன் பேசுகிறபோது, “வட சென்னை படத்தில் ராஜன் கதாபாத்திரத்தில் நடிக்க அமீரை கேட்ட போது எந்த தயக்கமும் இன்றி ஒப்புக்கொண்டார். அமீரை வைத்து மூன்று நாட்களுக்கு மேல் படப்பிடிப்பை நடத்துவது கஷ்டம் என்றார்கள். இதெல்லாம் சரியாக வராது என்று தமிழ் சினிமா வட்டாரம் முழுவதும் பேசப்பட்டது. அவர்கள் கூறியது நடக்கவில்லை.

அமீர் தயாரித்து நடித்துள்ள படத்தை வெளியிடும் பொறுப்பை நானாக எடுத்துக்கொள்ளும் அளவிற்கு எங்கள் நட்பு பலப்பட்டுள்ளது.

சூர்யா நடிக்கவுள்ள வாடிவாசல் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அமீர் நடிக்கின்றார். வாடிவாசல் படத்தை ஒப்புக் கொண்டபின் அமீரை நேரில் சென்று சந்தித்தேன்.

சூர்யாவுக்கும் உங்களுக்கும் எப்படி என்று கேட்டேன். என்ன விஷயம் என்றார். வாடிவாசல் படம் தென் மாவட்டத்தை கதைகளமாக கொண்டது. முக்கியமான கதாபாத்திரம் நீங்கள் நடிக்க வேண்டும் என்று கூறிய போது எந்த தயக்கமும் இன்றி ஒப்புக்கொண்டார். மேலும் அமீர் உடன் இணைந்து பணிபுரிவதில் எனக்கு சௌகரியமாக உள்ளது. அது தான் அமீர்” என்றார்.

தொடர்ந்து அவரிடம், வாடிவாசல் படப்பிடிப்பு எப்போது என்று கேள்வி எழுப்பியபோது, 2024 பிற்பகுதியில் தொடங்கும் என்றார்.

ஜல்லிக்கட்டை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இந்த படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டதில் இருந்தே அதன் மீதான பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

சூர்யா கால்ஷீட் பிரச்சனை உள்ளிட்ட காரணங்களால், படப்பிடிப்பு தாமதமானது அதனால் விடுதலை படத்தை இயக்க முடிவு செய்தார் வெற்றிமாறன்.

புரோட்டா சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்த விடுதலை படப்பிடிப்பு தொடங்கியதும்  படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க வெற்றிமாறன் முடிவு செய்தார்.

அதன்படி முதல் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில் இரண்டாம் பாகத்தை வெற்றிமாறன் இப்போது இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. fight between suriya and ameer

அதனால் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு, அடுத்த ஆண்டு பிற்பாதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

இராமானுஜம்

தெலுங்கு நடிகருடன் மிருணாள் தாக்கூர் திருமணம்?

பாஜக தலையீடு… ஸ்டாலின் உரை புறக்கணிப்பு?: இலங்கை அரசு விளக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel