வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்தின் படப்பிடிப்பின் போது ரோப் கயிறு அறுந்து விழுந்து சண்டைப் பயிற்சியாளர் சுரேஷ் உயிரிழந்தார்.
அசுரன் திரைப்படத்திற்கு பிறகு சுதா கொங்கரா, விக்னேஷ் சிவனுடன் இணைந்து பாவ கதைகள் என்ற ஆந்தலாஜி திரைப்படத்தை வெற்றி மாறன் இயக்கினார்.
அதனைத் தொடர்ந்து எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை அடிப்படையாக வைத்து விடுதலை திரைப்படத்தை வெற்றி மாறன் இயக்கி வந்தார்.
இப்படத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இரண்டு பாகங்களாக விடுதலை திரைப்படம் வெளியாக உள்ளது.
சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் விடுதலை திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. பின்னர் சென்னையின் புறநகர் பகுதியான வண்டலூர் அடுத்த ஊனமாஞ்சேரியில் செட் அமைக்கப்பட்டு இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வந்தது.
இந்தநிலையில், இன்று சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டது. அப்போது சண்டைக்காட்சியில் பயிற்சியாளராக ஈடுபட்ட வந்த சுரேஷ் ரோப் கயிறு அறுந்து விழுந்து காயமடைந்தார். உடனடியாக படக்குழுவினர் அவரை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் விடுதலை படக்குழுவினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
செல்வம்
மாமனும் மச்சானும்… ஆய்வுக் கூட்டத்தில் எம்.ஆர்.கே.வை கலாய்த்த நேரு
“அரசாணை வெளியிடாதது தவறில்லை” – அண்ணாமலைக்கு அமைச்சர் பதில்!