தளபதி விஜய் அரசியலில் களமிறங்க போவதாக அறிவித்தாலும் அறிவித்தார், அவரது கடைசி படத்தை இயக்கப் போவது யார்? என்ற கேள்வி தீயாய் பரவி வருகிறது.
இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்திருப்பவர் தளபதி விஜய். தற்பொழுது ‘GOAT’ திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
வெங்கட் பிரபு இயக்கும் இந்த திரைப்படத்தில் அவருடன் பிரபுதேவா, பிரசாந்த், லைலா, சினேகா, ஜெயராம் போன்ற பலர் நடிக்கின்றனர். இரட்டை வேடங்களில் விஜய் மிரட்ட இருக்கிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
படத்தில் இருந்து ‘விசில் போடு’ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. எனினும் விஜய், பிரபுதேவா, பிரசாந்த் போன்ற 90-ஸ் நடிகர்களை ஒரே திரையில் பார்த்த ரசிகர்கள் குதூகலம் அடைந்தனர்.
இந்த படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் திரைப்படம் தான் அவரது கடைசி திரைப்படம் என்று கூறப்படுகிறது. மேலும் படத்தை இயக்கப் போவது ஹெச்.வினோத் என்றும் செய்திகள் பரவி வந்தது. ஆனால் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில் விழா ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் வெற்றிமாறனிடம், ‘தளபதியின் கடைசி திரைப்படத்தை நீங்கள் தான் இயக்கப் போகிறீர்களா?’ என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், “அது எனக்கு தெரியாது. முன்பே அவருக்கு ஒரு கதை சொல்லியிருந்தேன், ஆனால் அது இப்பொழுது நடைபெறும் என்று தோன்றவில்லை”, என்று கூறியுள்ளார்.
–பிரியங்கா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சமூக நீதிக்கு ரோல் மாடல் தமிழ்நாடு: ஸ்டாலின் பெருமிதம்!
‘சும்மா அதிருதுல’… அஜித் டைட்டிலை கைப்பற்றிய அருண் விஜய்…!