அசுரன் படத்திற்கு பிறகு, நடிகர் தனுஷுடன் இயக்குனர் வெற்றிமாறன் மீண்டும் இணைய உள்ளார்.
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்கள் – இயக்குனர்கள் கூட்டணிக்கு எப்போதும் ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கும். அதில் மிக முக்கியமான ஒரு கூட்டணி தனுஷ் – வெற்றிமாறன் காம்போ.
பாலு மகேந்திராவிடம் வெற்றிமாறன் உதவி இயக்குனராக இருந்தபோது தனுஷுடன் நல்ல நட்பு ஏற்பட்டது. அப்போது தனுஷிடம் சொன்ன கதை தான் 2007-ஆம் ஆண்டு வெற்றி மாறனின் முதல் படமான பொல்லாதவன்.

இந்த படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பொல்லாதவன் ரிலீஸான பிறகு பலரும் தங்களது பைக்கில் படத்தில் இடம்பெற்ற பிஜிஎம் பாடலை பயன்படுத்தினர். மேலும், பல்சர் பைக் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானது.
தொடர்ந்து இந்தக் கூட்டணி ஆடுகளம் படத்தில் கைகோர்த்து, தேசிய விருதுகளை அள்ளிக்குவித்தது. அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கிய விசாரணை படத்தையும் தனுஷ் தான் தயாரித்தார். தொடர்ந்து வட சென்னை, அசுரன் என இரண்டு ஹிட் படங்களை இந்த காம்போ கொடுத்தது.

அடுத்ததாக விடுதலை 1, 2 படங்களை இயக்கிய வெற்றிமாறன், தற்போது மீண்டும் தனுஷுடன் கைகோர்த்துள்ளார். இதனால் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்த படத்தை விடுதலை படத்தை தயாரித்த, ஆர்.எஸ்.இன்போடைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. சூர்யா நடிப்பில் வாடிவாசல் படத்திற்கு பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆண்டுக்கு 3000 பேருக்கு வேலைவாய்ப்பு : தலைவாசல் கால்நடை பூங்கா திறப்பு!