வெண்ணிலா கபடி குழு பட நடிகர் திடீர் மரணம்!

சினிமா

வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்த துணை நடிகர் ஹரி வைரவன் இன்று உயிரிழந்தார்.

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால், சூரி உள்ளிட்ட பலர் நடித்த வெண்ணிலா கபடி குழு படத்தில், சக கபடி வீரராக நடித்தவர் ஹரி வைரவன்.

இவர், நான் மகான் அல்ல, குள்ளநரி கூட்டம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். மதுரையைச் சேர்ந்த இவர் உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சையில் இருந்து வந்தார்.

கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நடிகர் ஹரி வைரவன், இன்று இரவு 12.15 மணியளவில் உயிரிழந்தார். நடிகர் ஹரி வைரவன் உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவருடைய மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். இன்று மதுரையில் அவருக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற இருக்கிறது.

கடந்த செப்டம்பர் மாத இறுதியில், ஹரி வைரவனுக்கு இரு சிறுநீரகங்களும் செயலிழந்து, கை, கால், முகம் எல்லாம் வீங்கி நடக்கவே முடியாமல் அவதிப்பட்டபோது, அவருக்கு சிகிச்சையளிக்க நடிகர்கள் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், சூரி உள்ளிட்டோர் பண உதவி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெ.பிரகாஷ்

ஈரோடு பள்ளி கழிப்பறை: தலைமை ஆசிரியை கைது!

குளிர்காலக் கூட்டத் தொடர்: காங்கிரஸ் இன்று ஆலோசனை!

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published.