வெங்கட்பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி நடிப்பில் உருவாகி வரும் படம் NC22.
‘மாநாடு’, ‘மன்மதலீலை’ படங்களுக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு இயக்குநர் வெங்கட் பிரபு தற்போது நாக சைதன்யா நடிக்கும் தெலுங்கு படத்தை இயக்கி வருகிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகிவரும் நாக சைதன்யாவின் 22 வது படமான இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இணைந்து இசையமைக்க இருக்கும் இந்தப் படம் வெங்கட்பிரபுவுக்கு 11ஆவது படம்.
செப்டம்பர் இறுதியில் துவங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியில் உள்ள மேலகோட் என்ற இடத்தில் மதுபான கடை போல் மிகப்பெரிய செட் அமைத்து ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.

அங்கு, ராயகோபுர கோவில் அருகில் அமைக்கப்பட்டுள்ள மதுபான கடை செட்டுக்கு அந்த பகுதி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
காவல் துறையினரிடம் 2 நாட்கள் ஷூட்டிங் நடத்த அனுமதி பெற்றுள்ள படக்குழு என்ன மாதிரியான காட்சிகள் எடுக்கப்படும் என்பது குறித்து தெரிவிக்கவில்லை என்றும் 2 நாட்களை கடந்து ஷூட்டிங் நடத்தி வருவதாக கூறி தகராறில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் அந்த செட்டை அடித்து நொறுக்கியுள்ளனர். இந்த சம்பவத்தின்போது நாகசைதன்யா அந்த செட்டில் இருந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.
மு.வா.ஜெகதீஸ் குமார்