திருமணமாகி 24 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு லண்டனில் இருந்தபடி நடிகை ஷாலினி கணவர் அஜித்குமாருடன் வெளியிட்ட வீடியோ வைரலான நிலையில் அந்த தம்பதிக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.
திரையுலக காதல்கள் நிஜத்தில் நிலைப்பதில்லை. எத்தனையோ நடிகர் நடிகைகள் காதலித்து திருமணமும் செய்து கொள்கின்றனர். உடனடியாகவே, அல்லது சில ஆண்டுகளுக்கு பிறகோ விவாகரத்தும் செய்து விடுகின்றனர்.
ஒரு சிலர் மட்டுமே காதலில் உறுதியாக நின்று வாழ்க்கையில் வெற்றி பெறுகின்றனர். உண்மையில் காதலுக்கு மரியாதை செய்யும் விதத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட நடிகர் அஜித் – ஷாலினி தம்பதி நிச்சயமாக காதலிப்பவர்களுக்கு உதாரணமானவர்கள் என்றால் மிகையல்ல!
2000ஆம் ஆண்டில் அஜித் ஷாலினி திருமணம் சென்னையில் நடைபெற்றது. கடந்த சில மாதத்திற்கு முன்பு தங்களின் 24 ஆவது திருமண நாளை இந்த தம்பதி சிறப்பாக கொண்டாடினார்கள். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய ஷாலினி, நல்லதொரு தாயாக இருந்து குடும்பத்தை கவனித்து கொள்கிறார்.
நடிகை ஷாலினிக்கு ஒரு பிரச்னை என்றால், எங்கிருந்தாலும் அடுத்த நிமிடமே அஜித் ஆஜராகி விடுவார்.சமீபத்தில் நடிகை ஷாலினி மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார். அப்போது , வெளிநாட்டில் இருந்த அஜித்குமார் உடனடியாக புறப்பட்டு சென்னை வந்து மனைவியை பார்த்துக் கொண்டதை உதாரணமாக கூறலாம்.
இந்த நிலையில் அஜித் ஷாலினி பற்றிய தகவல் ஒன்றை சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட் இண்டியா க்ளிட்ஸ் யூடியூப் சேனல் மூலம் தெரிவித்துள்ளார்.
அதில், தீனா பட ரிலீசின்போது தான் சமையல் கலைஞராக பணியாற்றிய பிரபல ஹோட்டலுக்கு ஷாலினியுடன் அஜித் வந்ததாகவும் அப்போது, அவரிடம் உங்களில் யார் முதலில் காதலை கூறியது என்று கேட்டதாகவும் வெங்கடேஷ் பட் தெரிவித்துள்ளார்.
அஜித் நினைத்திருந்தால் தன்னுடைய கேள்வியை தவிர்த்திருக்கலாம் என்றும் ஆனால் ஒரு நண்பனிடம் பேசுவது போல, ஷாலினி எங்க காதலை சொன்னாங்க, நான் தான் அவங்க பின்னாடி போய் ஐ லவ் யூன்னு சொன்னேன் என்று அஜித் கூறியதாக தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு… அஜித் ஷாலினியின் வைரல் வீடியோ!
வாரத்தின் முதல் நாளன்று குறைந்த தங்கம் விலை!