venkat prabu unveiled the NOVP movie into social media

விஜய் ரசிகர்களை அப்செட் செய்தாரா வெங்கட் பிரபு?

சினிமா

மீசைய முறுக்கு புகழ் ஆனந்த் இயக்குனராக அறிமுகமாகும் ’நண்பன் ஒருவன் வந்த பிறகு’ திரைப்படம் குறித்த அறிவிப்பை வெங்கட் பிரபு இன்று (ஜூலை 30) வெளியிட்டுள்ளார்.

மாநாடு, கஸ்டடி திரைப்படங்களைத் தொடர்ந்து விஜய்யின் தளபதி 68 திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளதாக கடந்த மே மாதம் அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில் ’So what’s next…. Wait till tomorrow 11am’ என்று வெங்கட் பிரபு நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் செய்திருந்தார். இதனையடுத்து தளபதி 68 படம் குறித்த அறிவிப்பை ஏதும் அவர் வெளியிடுவாரா என்று ரசிகர்கள் காத்திருந்தனர்.

இந்த நிலையில் மீசைய முறுக்கு புகழ் ஆனந்த் இயக்குனராக அறிமுகமாகும் ’நண்பன் ஒருவன் வந்த பிறகு’ திரைப்படம் குறித்த அறிவிப்பை வெங்கட் பிரபு இன்று வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

நட்பையும், நண்பர்களின் பயணத்தையும் மையமாக கொண்ட இந்த படத்தில் பவானி ஸ்ரீ, ஆர்.ஜே.விஜய். மோனிகா, குமார வேல், குக் வித் கோமாளி புகழ் பாலா, வில்ஸ்பர்ட், இர்பான், சபரிஷ் மற்றும் RJ ஆனந்தி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்திற்கு காற்றின் மொழி புகழ் ஏ.ஹெச்.காஷிப் இசையமைக்கிறார். மசாலா பாப்கார்ன் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஒயிட் ஃபெதர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.

#NOVP படம் குறித்து இயக்குநர் ஆனந்த் கூறுகையில், “ஒவ்வொரு தசாப்தத்திலும் நட்பைப் பற்றிய ஒரு படம் இருக்கும். தற்போது, இந்த வகையிலான படத்தை ரசிகர்கள் மிஸ் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில்  NOVP என்பது நட்பை போற்றும் திரைப்படமாக வெளி வர உள்ளது.  இதில் நடித்த 13 பேருமே படப்பிடிப்பின் முடிவில் நெருங்கிய நண்பர்களாகிவிட்டோம்.” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே வெங்கட் பிரபு தளபதி 68 அப்டேட் கொடுப்பார் என்று காத்திருந்த ரசிகர்கள், அப்செட் செய்துவிட்டதாக வேதனை தெரிவித்து வந்தனர்.

அதற்கு ’தளபதி 68 பட அறிவிப்பு சும்மா தெறிக்க விடும்… காத்திருங்கள்’ என்று வெங்கட் பிரபு பதில் அளித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் விபத்துக்கான காரணம் என்ன?: அமைச்சர் விளக்கம்!

அறிவோம் திராவிடம் -இளைஞரணியை விரல் பிடித்து அழைத்துச் செல்லும் ஆ.ராசா

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *