தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘GOAT’ படத்தின் முக்கிய அப்டேட் குறித்து, இயக்குநர் வெங்கட் பிரபு சூசகமாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருக்கிறார்.
‘GOAT’ திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து மீனாட்சி சௌத்ரி, பார்வதி, யோகிபாபு, சினேகா, லைலா, வைபவ், நிதின் சத்யா, பிரேம்ஜி, மோகன், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், ஜெயராம், கஞ்சா கருப்பு, விடிவி கணேஷ் உள்ளிட்ட எக்கச்சக்க நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்து வரும் ‘GOAT’ படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். தற்போது இப்படத்தின் ஷூட்டிங் சென்னை தாம்பரத்தில் நடைபெற்று வருகிறது.
படத்தின் முக்கிய தகவல்கள் ஏற்கனவே கசிந்ததால், படம் குறித்த லேட்டஸ்ட் தகவல்களை பொத்திப்பொத்தி ரகசியம் போல படக்குழு காத்து வருகிறது. இதனால் டென்ஷனான ரசிகர்கள் எக்ஸ் தளத்தில், ”பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் கொடுங்கள்” என வெங்கட் பிரபுவை டேக் செய்து கேள்வி கேட்டனர்.
Too early bro
— venkat prabhu (@vp_offl) February 22, 2024
இதைப்பார்த்த வெங்கட் பிரபு, ”வெகு விரைவிலேயே வரும் ப்ரோ” என பதில் அளித்திருக்கிறார். இதையடுத்து தளபதி ரசிகர்கள் தற்போது பீஸ்ட் மோடுக்கு மாறி, வெங்கட் பிரபுவை வாழ்த்தி வருகின்றனர்.
மார்ச் முதல் வாரத்தில் ‘GOAT’ படத்தின் அப்டேட் வரும் என முன்னதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அது பர்ஸ்ட் சிங்கிள் ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அநேகமாக அது விஜய்-மீனாட்சி சௌத்ரி இடையிலான ரொமாண்டிக் பாடலாக இருக்கலாம்.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
எலக்ஷன் ஃப்ளாஷ் : வருவாய் அலுவலர் போராட்டம்… புதிய திட்டங்களின் நிலை?
சீதா.. அக்பர்.. : அரசு வழக்கறிஞரிடம் சீறிய நீதிபதி… அதிரடி உத்தரவு!