வெந்து தணிந்தது காடு: உதயநிதி செய்யும் ஏற்பாடு!

சினிமா

மாநாடு படத்தை தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்துள்ள ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.

இப்படத்தில் சிலம்பரசனுக்கு ஜோடியாக புதுமுக நடிகை சித்தி இதானி நடித்திருக்கிறார். ராதிகா சரத்குமார், நீரஜ் மாதவ், சித்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்தில் நடிகர் சிம்பு 19 வயது இளைஞனாக நடித்துள்ளார். இதற்காக அவர் 15 கிலோவுக்கு மேல் உடல் எடையை குறைத்து நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்துக்கு சித்தார்த்தா நூனி ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி மேற்கொண்டுள்ளார்.

வெந்துதணிந்தது காடு திரைப்படம் வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. தமிழகத்தில் இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

Vendhu Thanindhathu Kaadu Udhayanidhi arrangements

இந்நிலையில், படத்தின் தணிக்கை சான்றிதழ் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வெந்து தணிந்தது காடு படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.

இப்படம் 2 மணிநேரம் 53 நிமிடம் திரையில் ஓடக்கூடியதாக உள்ளது. வெந்து தணிந்தது காடு படத்தை 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிட உதயநிதி தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

கடந்த வாரம் ” கணம்” திரைப்படத்திற்கான காட்சிகள் அதிகரிக்கப்பட்டு, திரையரங்குகளும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஆர். விஜயகுமார் தயாரிப்பில், இயக்குநர் ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்கத்தில், அருண் விஜய், பாலக் லால்வானி நடித்துள்ள திரில்லர் டிராமா திரைப்படம் சினம் செப்டம்பர் 16 திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப்படம் 2019ல் தொடங்கப்பட்டு பைனான்ஸ் பிரச்சினை காரணமாகக் கிடப்பில் போடப்பட்ட சினம் தற்போது தூசி தட்டப்பட்டு வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரச்சினைகள் முடிந்து அறிவித்தபடி படம் வருமா என்கிற சந்தேகம் காரணமாகச் சினம் படத்திற்குத் திரையரங்குகள் கிடைப்பதில் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது.

இராமானுஜம்

கொல் அல்லது கொல்லப்படு: வெந்து தணிந்தது காடு டிரெய்லர்!

+1
1
+1
0
+1
0
+1
2
+1
0
+1
3
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *