கடைசி நேர பஞ்சாயத்து: சிம்புவின் படத்துக்கு தடை இல்லை!

சினிமா

நடிகர் சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படம் நாளை (செப்டம்பர் 15) வெளியாவதில் சிக்கல் இல்லை எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

நடிகர் சிம்பு நடித்து இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு’ படம் நாளை (செப்டம்பர் 15) வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில், இந்தப் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆன் இன் பிச்சர்ஸ் நிறுவனம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில், “2018ம் ஆண்டு நடிகர் சிம்பு நடிக்க ’சூப்பர் ஸ்டார்’ என்ற பெயரில் ஒரு படத்தை இயக்குவதற்காக, இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனுடன் ஓர் ஓப்பந்தம் போடப்பட்டது.

இதற்கு முன்பணமாக 2 கோடியே 40 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. எங்களிடம் கூறப்பட்ட அதே கதையை வைத்துத்தான், நாளை வெளியாக இருக்கும் ’வெந்து தணிந்தது காடு’ படத்தை எடுத்துள்ளனர்.

ஆகவே, எங்களுக்கு தரவேண்டிய 2 கோடியே 40 லட்சம் ரூபாய் பணத்தை தராமல் அப்படத்தை வெளியிடக்கூடாது. அப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும்” என அதில் கூறப்பட்டிருந்தது.

vendhu thanindhathu kaadu No ban Released tomorrow!

இந்த மனுவானது இன்று (செப்டம்பர் 14) நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரரின் சார்பில் ஆஞரான வழக்கறிஞர், “2018ம் ஆண்டு ஒப்பந்தத்தை மீறி எடுக்கப்பட்ட இந்தப் படத்தை வெளியிடுவதற்குத் தடைவிதிக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.

அதேசமயம் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஒப்பந்தம் செய்யப்பட்டது என்பது உண்மைதான்.

அடுத்த படத்தை இயக்குவதற்கு முன்பாக, மனுதாரருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை திருப்பித் தந்துவிடுகிறோம்.

இது சம்பந்தமாக மனுதாரருடன் நாங்கள் சமரசமாகச் செல்கிறோம்” என்று கோரிக்கை வைத்தார்.

இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனின் சமரசத்தை ஏற்று மனுதாரர் சம்மதம் தெரிவித்தார்.

இதையடுத்து, மனுதாரரின் பணத்தை திருப்பி அளிப்பது தொடர்பான உத்தரவாதத்தை பதில் மனுவாக தாக்கல் செய்யும்படி கெளதம் வாசுதேவ் மேனன் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த மனுமீதான விசாரணையை செப்டம்பர் 21ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

தற்போது இந்தப் படத்துக்கு எந்தத் தடையும் விதிக்கப்படாததால், ’வெந்து தணிந்தது காடு’ படம் நாளை ரிலீசாக இருக்கிறது. இதனால் சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

ஜெ.பிரகாஷ்

வெந்து தணிந்தது காடு: உதயநிதி செய்யும் ஏற்பாடு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *