‘நல்லா தூங்கிட்டு வாங்க’ : கௌதம் வாசுதேவ் மேனன்

சினிமா

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்துள்ள படம் ‘வெந்து தணிந்தது காடு’.

ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இப்படத்தில் சித்தி இத்தானி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் நாளை வெளியாகவுள்ளது.

படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க வரும் ரசிகர்களுக்கு இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்.

பொதுவாகவே இவரது இயக்கத்தில் வெளிவரும் படங்களின் கதைக்குள் பார்வையாளன் பயணிக்க சற்றுநேரம் எடுக்கும்.

இது தமிழ் சினிமா பார்வையாளர்களுக்கு பழகிப் போன விஷயம் என்றாலும் முதல் முறையாக அதனை அவரே அறிவித்திருக்கிறார்.

வெந்து தணிந்தது காடு படத்தின் முதல்நாள் முதல்  காட்சியை பார்க்க வரும் ரசிகர்கள் நன்றாக தூங்கிவிட்டு வர வேண்டும்.

ஏனென்றால், கதை மற்றும் கதாபாத்திரத்தின் ஓட்டம் செட் ஆக கொஞ்சம் நேரம் எடுக்கும் என்று கூறியுள்ளார்.

வெந்து தணிந்தது காடு முதல்நாள் முதல் காட்சி தமிழகத்தில் சில இடங்களில் அதிகாலை 4.30 மணிக்கும் சில இடங்களில் 5 மணிக்கும் தொடங்குகிறது. மேலும் சிலம்பரசன் கெளதம் மேனன், ஏ.ஆர்.ரஹ்மான் மூவரும் இணைந்துள்ள மூன்றாவது படம் இது என்பதால் ‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகவுள்ளது.

தமிழகத்தில் மட்டும் இந்தப் படம் 600க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறது.

இராமானுஜம்

ரூ.40 கோடி சம்பளம் கேட்கும் சிம்பு

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.