ஆக்ரோஷம்… அதிரடி… பாக்ஸ் ஆபீஸில் வீரசிம்ம ரெட்டி அதகளம்!

சினிமா

பாலகிருஷ்ணா நடிப்பில் ‘வீரசிம்மரெட்டி’ ஜனவரி 12 அன்று வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. பொதுவாக பாலகிருஷ்ணா நாயகனாக நடிக்கும் படங்கள் முழுக்க முழுக்க பார்வையாளனுக்கு பொழுதுபோக்கு திரைப்படமாகவே இருக்கும்.

ஏன், எதற்கு, இது சாத்தியமா என்கிற ஆறாம் அறிவுக்கு பாலகிருஷ்ணா படங்களில் வேலையில்லை. அவரது படங்களுக்கே உரிய அனல் பறக்கும் சண்டை காட்சிகள், எதிரியை குலை நடுங்க வைக்கும் வசனங்கள், அசரடிக்கும் இசை அனைத்தும் பாலைய்யா என்கிற பாலகிருஷ்ணா படங்களில் கிடைக்கும். அப்படி அனைத்தும் ஒருங்கே நிறைந்துள்ள படம் தான் வீரசிம்மரெட்டி.

ஆங்கில படங்களுக்கு அயர்ன் மேன் எப்படியோ அதே போன்று நம்மூர் சினிமாக்களுக்கு பாலைய்யா என்கிற பாலகிருஷ்ணா. எதிரிகள் யாராலும் நெருங்க முடியாத சூப்பர்ஹீரோ அகண்டா படத்தின் இரண்டாம் பாகம் என சொல்லக்கூடிய வகையில் படம் இருக்கும்.


படத்தில் மொத்தம் 8 சண்டைக்காட்சிகள் என 20 நிமிசத்துக்கு ஒரு முறை அட்டகாசமான சண்டைக்காட்சிகள் படத்துக்கு பெரிய பலம். துணைக்கு தமனின் ஆக்ரோஷமான பின்னணி இசை தியேட்டரை ரணகளம் செய்கிறது.

கதைனு பெரிசா இல்லைனாலும், பாலைய்யாவின் மாஸ் ஹீரோயிசத்துக்காக பார்க்கலாம் என்கின்றனர் படம் பார்த்தவர்கள்.

110 கோடி ரூபாய் செலவில் எடுத்த இந்த படம் முதல் நாள் மட்டும் உலக அளவில் ரூ.54 கோடியை வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனமே அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டோபர் ஜெமா

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : காளைகளை அடக்கி காருடன் சென்ற விஜய்

ரசிகர் மன்றங்கள் ஆராதனைகளை நிறுத்துமா?

+1
2
+1
1
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.