தனுஷ் நடிப்பில் வெளியாகும் அவருடைய அடுத்த படம் வாத்தி. 2023 பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாகும் என்று கடந்த வருடம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சம்யுக்தா மேனன்,சாய்குமார், தனிகல பரணி, சமுத்திரக்கனி, தொட்ட பள்ளி மது, நரா சீனிவாஸ், ஆடுகளம் நரேன், இளவரசு,
நான் கடவுள் ராஜேந்திரன், ஹரிஷ் பேரடி மற்றும் பிரவீனா ஆகியோர் வாத்தி படத்தில் நடித்துள்ளனர்.
வெங்கி அட்லுரி இயக்கியுள்ள இந்தப்படத்தை, தெலுங்கு சினிமாவில் முன்னணி நிறுவனங்களான சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ சூர்யதேவர நாக வம்சி, ‘ ஃபார்ச்சூன் 4 சினிமாஸ்’ சாய் சௌஜன்யா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்தப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை வாரிசு படத்தை தமிழகத்தில் வெளியிட்ட லலித்குமாரின் செவன்ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் வாங்கியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தை இந்நிறுவனமே தயாரிக்க உள்ளது.
அதனால் வாத்தி படத்தை தமிழ்நாட்டின் எல்லா விநியோகப் பகுதிகளிலும் மினிமம் கியாரண்டி அடிப்படையில் வியாபாரம் செய்வது, அவ்வாறு அமையாத பகுதிகளில் அவரே வெளியிடுவது என்று முடிவு செய்திருக்கிறார் என கூறப்படுகிறது.
வாத்தி படம் வெளியிட திட்டமிட்டுள்ள நாளில் அந்தப் படத்திற்கு இணையாக வேறுபடங்கள் வெளியிடும் அறிவிப்புகள் எதுவும் இல்லை என்பதால் வாத்தி படம் நல்ல வசூலைப் பெறும் என்று நம்பிக்கையாக இருந்தார்கள்.
அந்த நம்பிக்கைக்கு வேட்டுவைக்கும் வேலையை தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிறுவன ஊழியர்கள் செய்து வருவதாக தகவல்கள் கசிய தொடங்கியுள்ளது.
அது என்ன பிரச்சினை?
கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம்ரவி, பிரியாபவானி சங்கர் நடித்துள்ள படம் அகிலன்.
இந்தப்படம் தயாராகிப் பல்வேறு மாதங்கள் ஆன போதும் சரியான வெளியீட்டுத் தேதி அமையாததால் முடங்கிப் போயுள்ளது
இப்போது அகிலன் படத்தை தயாரித்துள்ள ஸ்கிரீன்சீன் நிறுவனத்திடம் இப்படத்தை பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியிடுங்கள் என்று பிரபல தயாரிப்பு மற்றும் வெளியீட்டு நிறுவனம் கூறியுள்ளது .
வாத்தி படத்தின் விநியோக உரிமையை அந்நிறுவனத்தைச் சார்ந்தோர் தனிப்பட்ட முறையில் கேட்டதாகவும் அதற்கு லலித்குமார் மறுப்பு தெரிவித்ததால் அந்தப்படத்துக்குப் போட்டியாக அகிலன் படத்தைக் கொண்டுவர அந்நிறுவன ஊழியர்கள் திட்டமிடுவதாகச் சொல்லப்படுகிறது.
வாரிசு தந்த வெற்றி, அதன் காரணமாக திரையரங்கு, விநியோகஸ்தர்களின் பேராதரவு காரணமாக வாத்தி படத்தின் வெளியீட்டில் வரலாறு படைக்க தயாராகி வருகிறோம் என்கிறது லலித்குமார் வட்டாரம்.
இராமானுஜம்
வேலைவாய்ப்பு: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் பணி
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
டிஜிட்டல் திண்ணை: பாஜக இல்லாமலே இரட்டை இலை- எடப்பாடி சொன்ன சீக்ரெட்!