சினிமா கண்டுபிடிக்கப்பட்டு பரிணாம வளர்ச்சி அடைந்த பின்னர், தொழில்நுட்ப வளர்ச்சியைத் தாண்டி பல்வேறு ஜானர்கள், திரை மொழி வடிவம் , கதை சொல்லல் விதம் என படைப்பு ரீதியான மாற்றங்கள் பல நிகழ்ந்துள்ளன. அப்படி உருவான பல்வேறு ஜானர்களில் ஒன்று தான் ‘சினிமாவைப் பற்றிய ஒரு சினிமா ( cinema about a cinema ) ‘ .
அதாவது, ஒரு சினிமா உருவாவது அல்லது சினிமா உலகத்தைப் பற்றிய கதையைக் கொண்ட திரைப்படங்கள். இந்த ஜானரில் இந்திய சினிமாவில் பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.
நமது கோலிவுட்டில் இந்த ஜானரில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படங்களும் உண்டு. அதே சமயத்தில் இந்த ஜானரில் படம் எடுத்தால் அது தோல்வி அடையும் என்கிற ஒரு விதமான சென்டிமெண்ட் கூட இருந்து வந்தது.
இரண்டு கலைஞர்கள்
இந்த நிலையில் அதே போன்ற ஒரு கதையைக் கொண்டது தான் ‘ வருஷங்களுக்கு சேஷம் ‘. 50 ஆண்டுகளுக்கு முன் தொடங்கும் இந்தக் கதையில் வேணு என்கிற இளம் மலையாள எழுத்தாளரும், முரளி என்கிற இளம் இசைக்கலைஞரும் சந்திக்கின்றனர். சந்திப்பின் முடிவில் இருவருக்கும் இடையேயான கலைக் காதலால் நண்பர்களாகவும் ஆகிறார்கள்.
பின், எப்படியாவது மதராஸிற்கு (சென்னை) சென்றால் சினிமா உலகில் இருவரின் திறமைக்கும் தகுந்த இடம் கிடைக்குமென எண்ணி அப்போதைய மதராஸிற்கு செல்கின்றனர். அப்போதைய காலத்தில் தென்னிந்திய திரைப்படங்கள் அத்தனையும் தற்போதைய சென்னையில் தான் படமாக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே.
இவர்களின் திறமைக்கு ஏற்ற வாய்ப்புகள் இருவருக்கும் கிடைத்ததா..? இந்த சினிமா உலகம் இவர்களின் நட்பை என்னவாக மாற்றியது? போன்ற கேள்விகளுக்கான பதிலே ‘வருஷங்களுக்கு சேஷம் ‘ திரைப்படத்தின் கதை.
ஜி.வி.பிரகாஷின் டியர் இன்னொரு குட் நைட்டா? – திரை விமர்சனம்!
இந்தக் கதையை முன்னும் பின்னுமாக ‘ நான் லீனியர் ( non linear ) ‘ திரைக்கதை வடிவில் நமக்கு படைத்திருக்கிறார் இயக்குனர் வினீத் ஶ்ரீநிவாசன். இந்தப் படமே நடிகர் தியான் ஶ்ரீநிவாசன் ஏற்று நடித்துள்ள வேணு கதாபாத்திரம் வாயிலாகத் தான் நமக்கு கூறப்படுகிறது.
மேலும், படத்தின் தொடக்கத்திலேயே அவர் தனது நண்பர் முரளியை தேடி பயணித்துக் கொண்டிருப்பதும் நமக்கு காட்டப்படுகிறது. ஆக, நண்பர்களாக மதராஸிற்கு வந்த இருவரில் ஒருவர் மட்டும் எங்கே போனார்?
இவர்களின் பிரிவிற்கு காரணம் என்ன? போன்ற விஷயங்கள் கதையின் மீது ஆர்வத்தை தூண்டுகின்றன. ஆனால் இந்த கேள்விகளுக்கான பதில் நமக்கு படத்தின் முதல் பாதியிலேயே கிடைத்து விடுகிறது.
பிரணவ் லால்
அதற்கு பிறகு இரண்டாம் பாதியில் இந்தக் கதை வேறோரு பாதையை நோக்கிப் போகிறது. எதைப் பற்றியும் பெரிதாகக் கவலைப்படாத, கலையைக் காதலித்து அதன் உடனே வாழ்ந்து வரும் ஒரு ஒழுங்கற்ற கலைஞன் என்கிற கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் பிரணவ் லால்.
குறிப்பாக அவர் கலையை அணுகுகையில் அவரிடத்தில் இருக்கும் தன்னம்பிக்கை, ஸ்டைல், துறுதுறு உடல்மொழி என அனைத்தும் ரசிக்க வைக்கிறது. இப்படிப்பட்ட கதாபாத்திரம் எடுக்கும் ஒரு முடிவால் அவதிப்படுவது, ஒரு விதமான குற்ற உணர்ச்சியில் , பொறாமையில் திரிவது.
பஹத் ஃபாசிலின் ‘ஆவேசம் ‘ எப்படி இருக்கிறது? – திரைப்பட விமர்சனம்!
என தன்னைத் தானே அழித்துக்கொள்ளக் கூடிய ஒரு கலைஞனாக அந்த கதாபாத்திரமும் சரியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த கதாபாத்திரத்தை கொஞ்சம் நியாயப் படுத்துவதற்காக எழுதப்பட்ட ‘இந்திரா ‘ எனும் புகழ்பெற்ற இசையமைப்பாளரின் கதாபாத்திரம் கொஞ்சம் செயற்கையாகவே தெரிந்தது.
அதைத் தவிர்த்து தியான் ஶ்ரீநிவாசன் ஏற்றுள்ள வேணு கதாபாத்திரம், ஓய்.ஜி.மகேந்திரன் ஏற்றுள்ள ‘சுவாமி ‘ என்கிற கதாபாத்திரம், தயாரிப்பாளர் ஜயன் என்கிற கதாபாத்திரம் என பல கதாபாத்திரங்கள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருந்தன.
நிவின் பாலி
குறிப்பாக கொஞ்ச நேரம் மட்டும் வரும் நிவின் பாலி கதாபாத்திரம் செய்யும் அலப்பறைகள் ‘ அடி பொலி ‘ . அந்த கதாபாத்திரமும் ஒரு வகையில் நிவின் பாலியின் நிஜ வாழ்க்கையை ஒட்டி எழுதப்பட்டு இருப்பது எல்லாம் மலையாளத்தில் மட்டுமே சாத்தியம்.
இந்தப் படமே முழுக்க மியூசிக்கல் படமாக இருப்பதால் , அம்ரித் ராம்நாத் இசை இந்தப் படத்திற்கு பெரிய உதவி செய்கிறது. ஆனால், 70-களில் அமைக்கப்பட்டதாக வரும் ஒரு பாடல் நேற்று கம்போஸ் செய்த பாடலைப் போன்ற உணர்வை சிலருக்குத் தரலாம்.
‘ரோமியோ’ விஜய் ஆண்டனி கவர்கிறாரா? – திரை விமர்சனம்!
இரு கலைஞர்களின் நட்பு, அதற்குள் இருக்கும் பிரிவை விளக்கும் ஒரு காட்சி, பின் பல ஆண்டுகள் கழித்து இருவருக்குமான இடங்கள் எவ்வாறு கிடைக்கிறது? போன்ற விஷயங்களை உணர்த்தும் காட்சிகள் மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டு உள்ளது.
கல்யாணி பிரியதர்ஷன்
ஆனால், கல்யாணி பிரியதர்ஷன், அவரது கணவர், அக்கா, மாமா போன்ற கதாபாத்திரங்கள் கதையில் சரியாகப் பொருந்தவில்லை. குறிப்பாக கல்யாணி பிரியதர்ஷன் கதாபாத்திரத்தை மட்டும் இரண்டாம் பாதியில் ஒரு முக்கிய இடத்தில் வருவதாக எழுதியிருப்பது ஒரு வகையில் நியாயம் சேர்ப்பதாகத் தெரிந்தாலும் அது போதவில்லை.
அதோடு படத்தில் கல்யாணி பிரியதர்ஷனின் மேக்கப்பும் அபத்தமாகவேத் தெரிந்தது. அதைத் தவிர்த்து, படத்தின் இரண்டாம் பாதியின் ஆரம்பமும் சற்று சுவாரஸ்யம் குறைவே. ஒரு தனித்து விடப்பட்ட கலைஞனை அவனது நண்பன் தேடும் தேடலில் தொடங்கும்.
இந்தக் கதை இரண்டாம் பாதியில் இரண்டு தோற்ற கலைஞர்கள் வெற்றிக்காக போராடுவதாக மாறுகிறது. அதில் கதாபாத்திரத்தின் மாற்றங்கள், நகர்வுகள், அவைகள் காட்சியாக எழுதப்பட்ட விதம் ரசிக்கும் படி இருக்கிறது. மொத்தத்தில் இந்த ‘ வருஷங்களுக்கு சேஷம் ‘ பல நினைவுகளை கோர்த்து எழுதப்பட்ட ஒரு நட்புக்கான காதல் கடிதம்.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அண்ணியாக இல்லை… அன்னையாக வருகிறேன் : பிரமேலதா உருக்கம்!
Video: ‘அப்படி’ பைக் ஓட்டியதால் வந்த சர்ச்சை… குக் வித் கோமாளி பிரபலம் விளக்கம்..!
”அண்ணாமலை நகைச்சுவையாக மாறிவிட்டார்” : செல்லூர் ராஜூ விமர்சனம்!
சிம்புவிற்கான கதையில் நடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன்?… வைரலாகும் புதிய சர்ச்சை!