பொங்கல் திருநாளையொட்டி விஜய் நடித்துள்ள வாரிசு, அஜித்குமார் நடித்துள்ள துணிவு ஆகிய படங்கள் வெளியாகவிருக்கின்றன.
பொங்கல் தினத்திற்கு முன்னதாக ஜனவரி 12 ஆம் தேதி வியாழக்கிழமை இவ்விரு படங்களும் வெளியாகும் என்று தமிழ்நாட்டில் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் வெளிநாடுகளில் அதற்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்டு நடந்து வருகின்றன.
முதல் நிலை நடிகர்கள் நடித்த படங்கள் வெளியாகும் அன்று அந்த நடிகரின் ரசிகர்களுக்காகவும், பிரமிப்பை கட்டமைக்கவும் அதிகாலையில் சிறப்புக்காட்சிகள் நகரங்களில் உள்ள திரையரங்குகளில் திரையிடப்படுவது கடந்த பத்தாண்டுகளாக நடைபெற்று வருகிறது.
அதுபோல இவ்விரு படங்களுக்கும் அதிகாலைக் காட்சி இருக்குமா? என்றால், அதற்கு முன்பாகவே இருக்கிறது என்கிறார்கள்.
அதுமட்டுமின்றி இரண்டு படக்குழுவினரும் பரஸ்பர உடன்பாடு செய்து காட்சிகளின் நேரங்களை மாற்றி வைத்திருப்பதாகவும் திரையரங்கு உரிமையாளர்கள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
ஒரே நேரத்தில் இரண்டு படங்களையும் திரையிட்டால் இருதரப்பு ரசிகர்களிடையே மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால், இரண்டு படங்களையும் வெவ்வேறு நேரங்களில் திரையிடுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாம்.
அதன்படி, நள்ளிரவு ஒரு மணிக்கே வாரிசு படம் திரையிடப்படுமென்றும் அதிகாலை ஐந்து மணிக்கு துணிவு படம் திரையிடுவது என்றும் திட்டமிட்டிருக்கிறார்கள்.
வாரிசு படத்தை முதலில் திரையிடுவது என்கிற முடிவை துணிவு படத்தை தமிழ்நாட்டில் வெளியிடும் உதயநிதியும் ஏற்றுக்கொண்டாராம்.
அதனால், நள்ளிரவு ஒரு மணிக்கு வாரிசு படத்தைத் திரையிடும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
இராமானுஜம்
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹால் டிக்கெட்!
போதைப் பொருள் நடமாட்டம்: முதலமைச்சர் ஆலோசனை!