தமிழ்நாட்டில் விஜய், அஜித் நடித்து பொங்கலுக்கு வெளியாக இருக்கும் வாரிசு, துணிவு படங்களின் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு திரைப்படங்கள் வரும் 11-ம் தேதி திரைக்கு வருகின்றன.
சமீபத்தில் இரு படங்களின் டிரெய்லரும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கடந்த 2 மாதங்களுக்கு முன் தமிழ்நாட்டில் துணிவு படத்துக்கு அதிக திரையரங்குகளும் வாரிசு படத்துக்கு குறைவான திரையரங்குகளும் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது பாதிக்கு பாதி என்ற முடிவுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் இரு படங்களின் வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்பட்ட நிலையில், ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
இந்நிலையில் துணிவு மற்றும் வாரிசு படங்களின் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கி உள்ளது.
குறிப்பாக தமிழ்நாட்டில் மதுரை, தூத்துக்குடி உள்பட பல மாவட்டங்களில் முன்பதிவு தொடங்கின. அதுமட்டுமில்லாமல் நாளை முதல் தமிழ்நாடு முழுவதும் முன்பதிவு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் ஒரு டிக்கெட்டின் விலை 190 முதல் 200 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்தநிலையில் காலை 7 மணி காட்சி 300 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. அதற்கு அடுத்த காட்சி வழக்கமான விலைக்கே விற்பனையாகிறது.
பொதுவாக முன்னணி நடிகர்களின் படம் வெளியாகிறது என்றால் அதன் முதல் நாள் முதல் காட்சி டிக்கெட்டின் விலையும் அதிகரித்தே இருக்கிறது.
இந்த முறை திரையரங்கு உரிமையாளர்கள் இதற்கு ஒரு முடிவு கட்டினால் நன்றாக இருக்கும் என மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கலை.ரா
Comments are closed.