“அஜித் நமது நண்பர் தான், அவரது துணிவு திரைப்படமும், வாரிசு திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாவது மக்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும்” என்று விஜய் தன்னிடம் கூறியதாக நடிகர் ஷாம் தெரிவித்துள்ளார்.
விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படமும், அஜித் நடிக்கும் துணிவு திரைப்படமும் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு பொங்கலுக்கு ஜில்லா, வீரம் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகின.
8 வருடங்களுக்கு பிறகு அஜித், விஜய் நடிக்கும் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளதால் தல, தளபதி ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
வாரிசு திரைப்படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே, தீ தளபதி பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், துணிவு திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சில்லா சில்லா பாடல் வரும் டிசம்பர் 9-ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்தநிலையில், அஜித் நமது நண்பர் தான் அவரது துணிவு படமும், வாரிசு படமும் பொங்கலுக்கு வெளியாவது மக்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என்று விஜய் தெரிவித்துள்ளார்.
வாரிசு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ஷாம் பிகைண்ட்வுட்ஸ் யூடியுப் சேனலுக்கு அளித்த பேட்டியில், “ஒரு பெரிய நிறுவனத்திற்கு அடுத்த வாரிசு யார் என்ற கேள்வி எழும், அதற்காகத் தான் இந்த திரைப்படத்திற்கு வாரிசு என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
துணிவு திரைப்படத்தில் நான் தான் அஜித்திற்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியது. வாரிசு படத்தில் நடித்ததால் என்னால் துணிவு திரைப்படத்தில் நடிக்க முடியவில்லை.
துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது என்றவுடன் நான் விஜய் அண்ணாவுக்கு போன் செய்து சொன்னேன்.
“ஹேய் நல்ல விஷயம் தாண்டா…அவரும் நம்ம நண்பர் தானே…ரெண்டு படமும் ஓடும்டா…ரெண்டு படமும் ஓடட்டும்…மக்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும்.” என்றார்.
தளபதி விஜய் எப்பொழுதும் நேர்மறையாக சிந்திக்கக்கூடியவர். அனைவருக்கும் ஊக்கமளிக்கக்கூடிய வகையில் பேசக்கூடியவர்.
வாரிசு திரைப்படத்தில் விஜய் கேமரா முன்பு மேஜிக் செய்திருக்கிறார்.
அவரிடம் நிறைய விஷயங்களை நான் கற்றுக்கொண்டேன். ஜனவரி மாதம் 12-ஆம் தேதி வாரிசு திரைப்படம் நிச்சயம் வெளியாகும், அதில் எந்த மாற்றமும் இல்லை.” என்றார்.
துணிவு திரைப்படம் குறித்து விஜய் சொன்னதாக நடிகர் ஷாம் பேசிய வீடியோ காட்சிகளை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.
செல்வம்
ஆன்லைன் குற்றம்: அமைச்சர் சொன்ன அட்வைஸ்!
அம்பேத்கர் நினைவுநாள்: மு.க.ஸ்டாலின் சூளுரை!