வாரிசு – துணிவு : ரிலீசுக்கு முந்தைய வியாபார நிலவரம்!

சினிமா

விஜய்யின் வாரிசு படமும் அஜித்தின் துணிவு படமும் ரிலீசுக்கு தயாராகி உள்ள நிலையில், அந்த இரு படங்களின் ரிலீசுக்கு முந்தைய வியாபார நிலவரம் துணிவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய், அஜித் நடித்துள்ள வாரிசு மற்றும் துணிவு ஆகிய படங்கள் வருகிற ஜனவரி 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. 

வாரிசு படத்தின் தமிழ்நாடு உரிமை 68 கோடி ரூபாய், கேரள வெளியீட்டு உரிமை ரூ.6.5 கோடிக்கும்,  கர்நாடகா உரிமை ரூ.7.5 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளது.

வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜுவே விநியோகம் செய்யும் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இப்படத்தின் உரிமை ரூ.18 கோடிக்கு விற்பனையாகி உள்ளன. வெளிநாட்டு உரிமை 37 கோடி.

இந்தி உரிமை ரூ.34 கோடி, ஆடியோ உரிமை ரூ.10 கோடி, டிஜிட்டல் உரிமை ரூ.75 கோடி, தொலைக்காட்சி உரிமை ரூ.57 கோடி ரூபாய்க்கும் வியாபாரம் ஆகியுள்ளது.

அஜித்குமார் நடிப்பில் வெளியாகும் துணிவு படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமைக்காக ரெட் ஜெயண்ட் ஏற்கனவே முன்பணமாக 40 கோடி ரூபாய் கொடுத்துள்ளது. வாரிசு படம் போன்று அவுட்ரேட் முறையில் துணிவு படத்தின் தமிழக உரிமை கொடுக்கப்படவில்லை.

கேரளா உரிமை ரூ.2.5 கோடி, கர்நாடக உரிமை ரூ.3.6 கோடி, இந்தி உரிமை ரூ.25 கோடி, இசை உரிமை 2 கோடி. ஆந்திரா மற்றும் தெலுங்கானா உரிமைகள் ரூ.3.5 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் உரிமை ரூ.65 கோடி, தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை ரூ.20 கோடி, வெளிநாட்டு உரிமை ரூ.17 கோடிக்கும் விற்பனை ஆகியுள்ளது.

தொலைக்காட்சி, டிஜிட்டல் உரிமை, ஆடியோ உரிமையை தவிர்த் துதிரையரங்குகளை நம்பி இருக்கும் வெளிநாட்டு உரிமை, பிற ஏரியா உரிமைகள் மூலம் 140 கோடி ரூபாய் வாரிசு படத்திற்கு வருவாயாக கிடைத்துள்ளது.

Varisu Thunivu business situation

இந்த உரிமைகள் வாங்கியுள்ளவர்கள் முதலீட்டை வசூல் மூலம் திரும்ப பெற சுமார் 300 கோடி ரூபாய் மொத்த வசூல் ஆகவேண்டும். அதற்குமேல் வசூல் ஆனால் மட்டுமே லாப கணக்கை படம் வாங்கியவர்கள் தொடங்க முடியும்.

துணிவு படத்திற்கு மேற்கண்ட அடிப்படையில் 26.10 கோடி ரூபாய் மட்டுமே வருவாயாக கிடைத்து உள்ளது. தமிழ்நாட்டில் படத்தை வெளியிடுவதன் மூலம் கிடைக்கும் வசூல் முழுவதும் தயாரிப்பாளருக்குத்தான்.

படத்தை திரையரங்குகளில் வெளியிட சுமார் 60 கோடி ரூபாய் வரை ரெட் ஜெயண்ட் நிறுவனம் திரையரங்குகளிடம் முன் தொகை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த தொகை கிடைக்க சுமார் 140 கோடி ரூபாய் வசூலாக வேண்டும்.

இல்லை என்றால் வாங்கிய முன்பணத்தை திருப்பிக்கொடுக்க வேண்டும். 26.10 கோடிக்கு அவுட்ரேட் முறையில் வாங்கியுள்ளவர்களுக்கு சுமார் 75 கோடி ரூபாய் வசூல் மூலம் வருவாய் கிடைக்க வேண்டும்.

 

இராமானுஜம்

பிளஸ் 2 பொதுத் தேர்வு கட்டணத்தில் விலக்கு: யார் யாருக்கு?

வண்டலூர் பூங்கா ஊழியர்கள் 3வது நாளாக போராட்டம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0