வாரிசு படத்தின் வெற்றி மகிழ்ச்சியை கொடுத்தது: கணேஷ் வெங்கட் ராம்

சினிமா

வாரிசு படத்தின் வெற்றி தனக்கு மகிழ்ச்சியை கொடுத்ததாக அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த கணேஷ் வெங்கட் ராம் கூறியுள்ளார்.

‘அபியும் நானும்’, ‘உன்னைப்போல் ஒருவன்’ படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் நடிகர் கணேஷ் வெங்கட் ராம். இவர் அண்மையில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

இதைத்தொடர்ந்து தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகை பாவனா நடிக்கும் திரில்லர் ஹாரர் திரைப்படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார் கணேஷ் வெங்கட் ராம். இந்தப்படத்தை இயக்குநர் ஜெய் தேவ் இயக்குகிறார்.

இந்நிலையில் , இது குறித்து நடிகர் கணேஷ் வெங்கட்ராம் கூறியதாவது “வாரிசு படத்தின் வரவேற்பு மிகப்பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. தெலுங்கு, இந்தி, மலையாளம் சினிமாவில் பலவிதமான கதாப்பாத்திரங்கள் நடித்துள்ளேன்.

தமிழில் நமக்கு வித்தியாசமான கதாப்பாத்திரம் கிடைப்பதில்லையே என நினைத்திருக்கிறேன். ஆனால் அது வாரிசு மூலம் நிறைவேறியிருப்பது மகிழ்ச்சி.

Varisu success made me happy

அதிலும் இப்படத்தில் எனது கேரக்டரின் ஸ்கிரீன் பிரசன்ஸ் அட்டகாசமாக இருந்ததாக அனைவரும் பாராட்டினார்கள். இது மிகப்பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இப்போது வாரிசை தொடர்ந்து, பல வித்தியாசமான கதபாத்திரங்கள் தமிழில் வர ஆரம்பித்திருக்கிறது. சில படங்களில் முழுக்க என் லுக்கை மாற்றிக்கொண்டு நடிக்கிறேன் என்றார்.

மேலும் , அவர் “வாரிசுக்கு பிறகு இப்போது இயக்குநர் ஜெய்தேவ் இயக்கத்தில் ஒரு ஹாரர் திரில்லர் படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறேன். இப்படத்தில் நடிகை பாவனா நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் நடிக்கிறார்.

கொடைக்கானல் சென்னை பகுதியில் நடக்கும் கதை. அனபெல்லா சேதுபதி படத்தின் ஒளிப்பதிவாளர் கௌதம் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் ரசிகர்களுக்கு முற்றிலும் ஒரு புது அனுபவமாக இருக்கும்.

அடுத்தடுத்து பல சுவாரஸ்யமான படைப்புகள் எனது நடிப்பில் வரவுள்ளது. விரைவில் அது பற்றிய அறிவிப்புகளும் வரும் என்று கூறியுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு புகைப்படங்கள்: கொந்தளித்த டிஆர்கே கிரண்

அதானி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *