விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் வாரிசு படத்தின் ”தீ தளபதி” பாடல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் வம்சி பைடிபலி இயக்கத்தில் நடிகர் விஜய் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்-க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், யோகி பாபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீ வெங்கடேஷ்வரா பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்.
பொங்கல் கொண்டாட்டமாகத் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வருகின்றன.
கடந்த நவம்பர் மாதம் வாரிசு படத்தின் முதல் பாடலான ”ரஞ்சிதமே” வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றது. யூடியூப்பில் 60 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனைப் படைத்தது.
தொடர்ந்து இரண்டாவது பாடலான ”தீ தளபதி” இன்று (டிசம்பர் 4) மாலை 4 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி தற்போது வாரிசு படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.
இந்த பாடலை நடிகர் சிம்பு பாடியதோடு மட்டுமல்லாமல் லிரிக்கள் வீடியோவில் நடித்தும் உள்ளார். ”இட்ஸ் டைம் டு கிவ் இட் பேக் மாமு”, ”தீ தளபதி பேர கேட்டா விசிலடி” போன்ற வரிகளுடன் பாடல் அமைந்துள்ளது.
ரஞ்சிதமே பாடல் போல் இந்த பாடலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ற வகையில் #TheeThalapathy என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது.
மோனிஷா
வங்காளதேச பந்துவீச்சில் திணறிய இந்திய அணி!
ராகுலை தொடர்ந்து பிரியங்கா: காங்கிரஸின் புதிய ப்ளான்!