தமிழ்நாட்டில் அஜித்தை விட விஜய் தான் பெரிய நடிகர் என்று வாரிசு திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜூ தெரிவித்துள்ளார்.
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. தமன் இசையமைத்துள்ள இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
வாரிசு படத்திலிருந்து ஏற்கனவே ரஞ்சிதமே ரஞ்சிதமே, தீ தளபதி ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த பொங்கலுக்கு அஜித் நடிக்கும் துணிவு திரைப்படமும், விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படமும் வெளியாக உள்ளது.
இதனால் தல, தளபதி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இந்த பொங்கலை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
துணிவு திரைப்படத்தின் திரையரங்க விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வாங்கியுள்ளது. அதே நேரத்தில் வாரிசு திரைப்படத்தின் திரையரங்க விநியோக உரிமையை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இந்தநிலையில் வாரிசு மற்றும் துணிவு திரைப்படத்திற்கு சமமான திரையரங்குகளை ஒதுக்க வேண்டும் என்று வாரிசு திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜூ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், “வாரிசு திரைப்படத்துடன் அஜித் நடிக்கும் துணிவு திரைப்படமும் வெளியாக உள்ளது.
தமிழ்நாட்டில் விஜய் தான் நம்பர் 1 நடிகர் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.
அஜித்தை விட விஜய் தான் பெரிய நடிகர். வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்களுக்கு சமமான திரையரங்குகளை ஒதுக்க வேண்டும். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் துணிவு திரைப்படத்தை அதிக திரையரங்குகளில் வெளியிடுகிறது.
வாரிசு திரைப்படத்திற்கு கூடுதல் திரையரங்குகளை ஒதுக்குமாறு உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை வைக்க சென்னை செல்ல உள்ளேன். இது எனது பிசினஸ்.” என்று தில் ராஜூ தெரிவித்துள்ளார்.
அஜித்தை விட பெரிய நடிகர் விஜய் என்று தில் ராஜூ பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் விஜய் மற்றும் அஜித் ரசிர்கள் ட்விட்டரில் வார்த்தை போர் நடத்தி வருகிறார்கள்.
செல்வம்
“நீட்டுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவிக்கவில்லை” – அமைச்சர் நம்பிக்கை!
பத்திரிகையாளர்களுக்கு ஷாக் கொடுத்த எலான் மஸ்க்