நடிகர் விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி ‘வாரிசு’ படத்தை இயக்கி வருகிறார்.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு ஆகியோர் நடிக்கின்றனர்.
இசையமைப்பாளர் எஸ்.தமன் இசையமைக்க கார்த்திக் பழனி ஒளிப்பதிவில் கே.எல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
இந்த படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாரிசு படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை Phars Films நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை மாஸ்டர் பட தயாரிப்பாளர் லலித் கைப்பற்றி உள்ளார்.
இந்நிலையில் வாரிசு படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. கையில் டீ கிளாஸ் வைத்து காரின் மேல் ஏறி விஜய் அமர்ந்து இருப்பது போல போஸ்டர் அமைந்துள்ளது.
பின்னணியில் பெல்லாரி பகுதியில் உள்ள குவாரி சுரங்கம் காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
காவல் நிலையம் முன்பு குப்பையைக் கொட்டிய தூய்மைப் பணியாளர்: காரணம் என்ன?