ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றியதா வாரிசு? ட்விட்டர் விமர்சனம் இதோ!

சினிமா

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் இன்று (ஜனவரி 11) தமிழகம் முழுவதும் வெளியானது.

வாரிசு திரைப்படமானது எமோஷனல் கலந்த குடும்ப திரைப்படமாக உருவாகி உள்ளது. இன்று அதிகாலை 4 மணிக்கு வாரிசு திரைப்படத்தின் முதல் காட்சி வெளியானது. வாரிசு திரைப்படத்தை ரசிகர்கள் உற்சாகமாக ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

இந்தநிலையில், ட்விட்டரில் வாரிசு திரைப்படம் குறித்து ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

அருண் என்ற நபர் தனது ட்விட்டர் பக்கத்தில், “குடும்ப திரைப்படமாக வாரிசு உள்ளது. எந்த இடத்திலும் அதிகப்படியான சென்டிமெண்ட் காட்சிகள் இல்லை. படத்தின் முதல் மற்றும் இரண்டாவது பாதி தொய்வில்லாமல் செல்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

மகேஷ், “ரஞ்சிதமே பாடலில் விஜயின் நடனம் அருமையாக உள்ளது. படத்தில் விஜய் வரும் காட்சிகள், காமெடி நன்றாக உள்ளது. விஜய் தான் இப்படத்தின் ஆட்டநாயகன்.” என்றுள்ளார்.

பிரசன்னா, தளபதி விஜயின் நடனம், நடிப்பு, ஆக்‌ஷன் காட்சிகள் மாஸாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

பாபு என்ற நபர் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி என்று தெரிவித்துள்ளார்.

அஜித்குமார், “வாரிசு திரைப்படம் நான் எதிர்பார்த்ததை விட நன்றாகவே உள்ளது. நடிகர் விஜய் நன்றாக நடித்துள்ளார். தமன் சிறப்பாக இசையமைத்துள்ளார். குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக வாரிசு இருக்கும். இந்த வருடம் தளபதி பொங்கல்.” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

சட்டப்பேரவை வரலாற்றில் அனுப்பப்பட்ட முதல் கடிதம்!

துணிவு படம் எப்படி? – ரசிகர்கள் ட்விட்டர் விமர்சனம்!

+1
0
+1
1
+1
0
+1
1
+1
1
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *