விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள வாரிசு படத்தின் டிரெய்லர் வெளியான சில மணி நேரத்தில் 80 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை கடந்துள்ளது.
தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் நடிகர் விஜய் வாரிசு படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
இன்று (ஜனவரி 4) மாலை 5 மணிக்கு வாரிசு படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டது. சமூக வலைதளங்களில் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் ஏராளமான திரையரங்குகளில் வெளியானது.
திரையரங்கில் டிரெய்லர் வெளியாவதை ரசிகர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். கோயம்பேடு அருகே உள்ள ரோகினி திரையரங்கில் வெளியிடப்பட்டதை ஏராளமான ரசிகர்கள் ஒன்றாகக் கூடிக் கொண்டாடினர்.
இந்த கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் ரசிகர்கள் பலரும் “டிரெய்லர் வெளியாவதையே முதல் நாள் முதல் காட்சி போல் பண்றீங்களே” இந்த பொங்கல் வாரிசு பொங்கல்” என்று கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
டிரெய்லர் வெளியான 10 நிமிடங்களில் 10 லட்சம் பார்வைகளை கடந்தது. தொடர்ந்து படக்குழு வாரிசு டிரெய்லரின் ரியல் டைம் பார்வைகளைப் பதிவிட்டு வருகிறது.
தற்போதைய நிலவரப்படி வாரிசு டிரெய்லர் யூடியூப்பில் 80 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும் 10.5 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது.
முன்னதாக கடந்த டிசம்பர் 31ஆம் தேதி வெளியான துணிவு படத்தின் ட்ரெய்லர் இதுவரை 51 மில்லியன் பார்வைகளை கொண்டுள்ளது.
மோனிஷா
5 பேருக்கு கலைஞர் பொற்கிழி விருது அறிவிப்பு!