நடிகர் விஜய்யின் வாரிசு படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ பெற்றுள்ளது.
நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்னும் படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
சரத்குமார், பிரகாஷ் ராஜ், யோகி பாபு, பிரபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மற்றும் பிவிபி சினிமாஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் ”ரஞ்சிதமே” என்ற முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு 5 கோடி பார்வைகளைப் கடந்துள்ளது.
2023 பொங்கல் கொண்டாட்டமாக வாரிசு திரைக்கு வரவுள்ள நிலையில், வாரிசு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாரிசு படத்திற்குப் போட்டியாக அஜித் நடிப்பில் தயாராகி வரும் துணிவு திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. துணிவு படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
670க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் துணிவு படத்தை வெளியிட ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் இது வாரிசு படத்திற்காக ஒதுக்கப்படும் திரைகளை விடக் கூடுதல் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் வாரிசு படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் கைப்பற்றியுள்ளது. விஜய்யின் மாஸ்டர் படத்தினை வெளியிட்டதும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
உதயநிதியோடு மோதும் விஜய்: பனையூர் சந்திப்பின் பாலிடிக்ஸ் பின்னணி!
அழகிரிக்கு எதிராக முன்னாள் தலைவர்கள்: ஸ்டியரிங் செய்யும் செல்வப்பெருந்தகை