விஜய்யின் வாரிசு: தமிழ்நாட்டு வசூல் எவ்வளவு?

சினிமா

விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படம் உலக அளவில் ரூ.300 கோடியை வசூலித்துள்ளது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று அஜித்குமார் நடிப்பில் வெளியான துணிவு 250 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

பதான் திரைப்படம் 12 நாட்களில் இந்தியாவில் செய்த மொத்த வசூலை வாரிசு, துணிவு என இரண்டு படங்களும் சேர்ந்து உலக அளவில் வசூல் (550 கோடி ரூபாய்) செய்திருக்கிறது.

கடந்த வருடம் நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்து 2023 பிப்ரவரி 2 வரை ஊடகங்களில் வாரிசு, துணிவு இரண்டு படங்களின் செய்திகள் முக்கிய இடம்பிடித்தன.

படம் வெளியான பின் படைப்புரீதியாக வாரிசு, துணிவு என இரண்டு படங்களும் சுமாரான, மொக்கை படங்கள் என விமர்சகர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

இருந்தபோதிலும் அந்த விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படவில்லை தமிழகத்தில் இரண்டு படங்களும் இருக்கை அடிப்படையில், காட்சிகள் அடிப்படையில் சமபலத்தில் ஜனவரி 11 அன்று வெளியானது.

முதல் நாள் வாரிசு ரூ.19.43 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. உலக அளவில் 7 நாட்களில் ரூ.210 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

11 நாட்கள் முடிவில் படம் உலகம் முழுக்க ரூ.250 கோடிக்கும் மேல் வசூலித்திருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.

25 நாட்களை கடந்த நிலையில் வாரிசு 300 கோடி ரூபாய் மொத்த வசூல் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருப்பது சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

முதல் ஏழு நாட்களில் உலக அளவில் 210 கோடி ரூபாய் மொத்த வசூல் என்று வாரிசுபட தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்ததை சுட்டிக்காட்டி 90 கோடி ரூபாய் வசூல் கிடைக்க 18 நாட்களா? இதுவும் உண்மையான வசூலா? அல்லது ஜோடிக்கப்பட்டதா என்கிற கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

300 கோடி ரூபாய் மொத்த வசூலில் தமிழகத்தின் பங்கு சுமார் 150 கோடி ரூபாய் என்கிறது திரையரங்குகள் வட்டாரம்.

இதில் இருந்து தயாரிப்பரளருக்கு 75 கோடி ரூபாய் மட்டுமே வருவாயாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இராமானுஜம்

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார் விக்டோரியா கௌரி

அதானி விவகாரம்: இரண்டாவது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்!

+1
1
+1
5
+1
1
+1
4
+1
2
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *