வாரிசு படப்பிடிப்பு தளத்தில் வைத்து நடிகை ராஷ்மிகா மந்தனா, நடிகர் விஜய்யுடன் இணைந்து எடுத்த செல்ஃபி சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. வம்சி இயக்கும் இத்திரைப்படத்தில், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள், சமூக வலைதளங்களில் லீக் ஆனது படப்பிடிப்பு குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதனால் வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பானது கூடுதல் பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. வாரிசு திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே தொலைக்காட்சி, ஓடிடி, பாடல்கள் உரிமம் ரூ.180 கோடி வரை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தநிலையில், ராஷ்மிகா மந்தனா வாரிசு படப்பிடிப்பு தளத்தில் வைத்து நடிகர் விஜய்யுடன் இணைந்து எடுத்த செல்ஃபி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படங்களை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
செல்வம்
அதிக விலைக்கு வியாபாரம் ஆன விஜய்யின் வாரிசு