வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் “வாரிசு” படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூலை மாதம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
படத்தில் விஜய் ஆப் டெவலப்பராக நடிப்பதாக கூறப்படுகிறது.
சென்னை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்துவருகிறது.
வாரிசு படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். இந்தச் சூழலில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது வெளியாகுமென்று ரசிகர்கள் காத்திருந்தனர்.
நேற்று (அக்டோபர் 18 ) ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், சிவகார்த்திகேயன் மற்றும் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவுடன் ‘பிரின்ஸ்’ படத்தில் பணியாற்றிய அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட தமன், இந்த தீபாவளிக்கு ‘வாரிசு’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகும் என்பதை உறுதி செய்தார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
படத்திற்கான தொலைக்காட்சி உரிமம், ஓடிடி உரிமம், பாடல்களுக்கான உரிமம், வெளிநாட்டு ரிலீஸ் உரிமம் என 180 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடந்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.
ஓடிடி உரிமத்தை அமேசான் ப்ரைம் நிறுவனம் 60 கோடி ரூபாய்க்கு பெற்றுள்ளதாகவும், சாட்டிலைட் உரிமம் 50 கோடி ரூபாய்க்கும், டிஜிட்டல் ரைட்ஸ் 60 கோடி ரூபாய்க்கும், பாடல்கள் 10 கோடி ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வாரிசு படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்