வாரிசு படத்தில் விஜய் பாடியிருக்கும் ரஞ்சிதமே பாடலின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நேற்று ( நவம்பர் 5 ) வெளியானது. பாடல் வெளியான 24 மணி நேரத்தில் யூடியூப்பில் 16.40 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. மேலும், 1.36 மில்லியன் லைக்குகளையும் பெற்றுள்ளது.
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதல் வெளியானது பீஸ்ட் படம்.
இந்தப்படத்திலிருந்தது அரபிக் குத்து என்னும் பாடல் வெளியாகி அட்டகாசமான வெற்றியை பெற்றிருந்தது. அனிருத் , சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகி இருந்த இந்த பாடலுக்கான ப்ரோமோக்களும் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த படத்தில் ஜானி மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றி இருந்தார். அரபிக் குத்து உலகம் முழுவதும் உள்ள பிரபலங்களால் ரீல்ஸ்களாக செய்யப்பட்டது.
உலக அளவில் பிரபலமான அரபிக் குத்துப்பாடல் வெளியான ஒரே நாளில் சுமார் 23.77 மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருந்தது.
இதை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் நடித்து வரும் விஜய்யுடன் நடிகை ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க ஷாம், சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, குஷ்பூ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்த வருகின்றனர்.
இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளாக ரஞ்சிதமே பாடல் நேற்று வெளியானது. விவேக் வரிகளில், தமன் இசையில் இந்த பாடல் வெளியானது.
பாடல் வெளியான 24 மணி நேரத்தில் 16.40 மில்லியன் பார்வையாளர்களையும் 1.36 மில்லியன் லைக்குகளையும் பெற்று சாதனை படைத்துள்ளது.
இந்த சாதனை வரிசையில் முதல் இடத்தை அரபிக் குத்து பாடலும், இரண்டாவது இடத்தை ரஞ்சிதமே பாடலும் பெற்றுள்ளன.
அதே நேரத்தில் இந்த பாடல் பழைய தமிழ் பாடல் ஒன்றின் ரீமேக் என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
பால் விலை உயர்வு எபெக்ட்: இனிக்கும் டீ, கசக்கும் விலை!
மூன்று மாவட்டங்களில் தொடங்கிய ஆர்.எஸ்.எஸ்.பேரணி!