துணிவு, வாரிசு: ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த டிக்கெட் விலை!
பொங்கலுக்கு நான்கு நாட்கள் முன்னதாக ஜனவரி 11 ஆம் தேதி வாரிசு, துணிவு என இரண்டு படங்களும் வெளியாகவிருக்கின்றன.
ஜனவரி 11 அன்று நள்ளிரவு 1 மணிக்கு சிறப்புக்காட்சிகள் திரையிட திரையரங்கு உரிமையாளர்கள் திட்டமிட்டிருக்கின்றனர்.
தமிழ்நாடு முழுக்க சுமார் 100 திரைகளில் நள்ளிரவுக்காட்சியும் அதிகாலைக்காட்சியும் வழக்கமாக திரையிடப்படுவது வழக்கம்.
அதே போன்று ஜனவரி 11 அன்று வாரிசு, துணிவு படங்களும் திரையிடப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள திரைகளில் இவ்விரு படங்களும் சம அளவில் வெளியாகிறது.
நள்ளிரவு காட்சி அல்லது அதிகாலை காட்சிக்கான கட்டணம் ஒரு நபருக்கு ஆயிரம் ரூபாய் வசூலிக்கவேண்டும் என்று தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்குக்காரர்கள் ஆகிய மூவரும் இணைந்து முடிவு எடுத்திருக்கிறார்கள்.
தூக்கத்தைப் பொருட்படுத்தாமல் தனது அபிமான நடிகரின் படத்தை நள்ளிரவில் பார்க்க தயாராகி வரும் திரைப்பட ரசிகர்களின் ஆர்வத்தைப் பயன்படுத்தி கொள்ளையடிப்பது ரசிகர்களுக்கு செய்யும் துரோகம் என்பதுடன் அநியாயமானது என்கிற புலம்பல்கள் சம்பந்தபட்ட நடிகர்களின் ரசிகர்களிடம் எழுந்து வருகிறது.
இதுவரையிலும் தனது அபிமான நடிகரின் படத்திற்கு சமூக வலைதளங்களில் ஆக்ரோசமான பதிவுகளை வெளியிட்டு வந்த ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்து உள்ளனர்.
சென்னை போன்ற பெருநகரங்களில் அதிகாலை காட்சிக்கான டிக்கெட் கட்டணம் 1500 முதல் 3000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இராமானுஜம்
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களே… மெயில் ஐ.டி. இருக்கா?
மக்கள்தொகை பெருகக் காரணம்: நிதிஷ் பேச்சுக்கு பாஜக எதிர்ப்பு!