வாரிசு பட நடிகை அமெரிக்காவில் மூன்றாவது திருமணம்?

சினிமா

தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகை ஜெயசுதா. இவர் தனது 12 வயதில் கமல்ஹாசனுடன் 1972 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான பண்டாண்டி கபுரம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

மறைந்த இயக்குநர் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘அரங்கேற்றம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பின்னர் சொல்லத்தான் நினைக்கிறேன், நான் அவனில்லை, அபூர்வ ராகங்கள், பட்டிக்காட்டு ராஜா, இரு நிலவுகள், ராசலீலா’ பாண்டியன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தார்.

முதலில் வடே ரமேஷ் என்பவரை திருமணம் செய்த ஜெயசுதா சில ஆண்டுகளில் அவரை விட்டு பிரிந்தார். 1985ஆம் ஆண்டு தயாரிப்பாளர் நிதின் கபூர் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

2வது கணவர் நிதின் கபூருடன் ஜெயசுதா

2017ஆம் ஆண்டு அவர் தற்கொலை செய்தபின் தனது இரண்டு மகன்களுடன் ஹைதராபாத்தில் வசித்து வந்த ஜெயசுதா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதன் பின் 2016 ஆம் ஆண்டு தெலுங்குதேசம் கட்சி, அதன் பின் 2019ல் ஒய்.எஸ்.ஆர் கட்சியில் இருந்தார்.

மகனது திருமணம் முடிந்தபின் கடந்த இரண்டு வருடங்களாக அம்மா, அக்கா கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கியதால் ஜெயசுதா மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் தென்பட தொடங்கினார்.

அமெரிக்க தொழிலதிபருடன் திருமணம்

சமீபத்தில் வாரிசு திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் வெளிநாட்டைச் சேர்ந்த தொழில் அதிபருடன் கலந்துகொண்டார். அவர் தான் ஜெயசுதாவின் மூன்றாவது கணவர் என தகவல் பரவி வந்தது. ஜெயசுதா அமெரிக்காவுக்கு ஓய்வு எடுக்க சென்று இருந்ததாகவும், அங்கு வைத்து அந்த தொழில் அதிபரை ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது.

இருப்பினும், இந்த வதந்திகளை மறுத்துள்ள ஜெயசுதா, பிலிப் ரூல்ஸ், அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் என்றும், அவர் தன்னைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றை உருவாக்கி வருவதாகவும் தெரிவித்தார். திரைப்படத் துறையில் தனது பங்கைப் பற்றி நன்றாகப் புரிந்துகொள்வதற்காக அவர் தன்னுடன் வருவதாகவும், மேலும் அவர்களின் உறவுக்கு வேறு எதுவும் இல்லை என்றும் அவர் கூறி இருந்தார்.

இந்நிலையில் தற்போது ஜெயசுதா வெளிநாட்டை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும் ஜெயசுதா தரப்பில் இதனை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

இராமானுஜம்

பார்டர் பரோட்டா கடையில் கெட்டுபோன சிக்கன்? – மறுக்கும் உரிமையாளர்

”எங்களுக்கு 5 ஆண்டுகள் தான்… உங்களுக்கு 35 ஆண்டுகள்”-ஐபிஎஸ் அகாடமியில் அமித் ஷா

+1
1
+1
0
+1
0
+1
2
+1
0
+1
1
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *