வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை தொடங்கி இரவு. வரை நடைபெற்றது
இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு வழக்கமாக தயாரிப்பு நிறுவனம் கொடுக்கக்கூடிய அழைப்பு விடுக்கப்படவில்லை.
இந்நிலையில் வெளியீட்டு விழாவிற்கான அனுமதி அழைப்பிதழ் ஒன்று 4000ம் ரூபாய் முதல் 10,000 ம் வரை விலை போனது.
தமிழகத்தில் சில முன்னணி ஊடகங்கள் வாரிசு இசை வெளியீட்டு நிகழ்வுகளை உடனுக்குடன் வெளியிடும் கடமையை நிறைவேற்ற நுழைவு சீட்டை விலைக்கு வாங்கி தங்களது செய்தியாளர்களை நிகழ்ச்சிக்கு அனுப்பினார்கள்.
நள்ளிரவு கடந்தும் இசை வெளியீட்டு விழா செய்திகள் இணையத்தில் பொங்கிவழிந்தது.
இதைத்தான் தயாரிப்பாளர், நடிகர் விஜய், சன் தொலைக்காட்சி தரப்பில் எதிர்பார்த்ததாகவும் எதிர்பார்த்ததை காட்டிலும் செய்திகள் வீரியமாக வெளியானது என்றனர் தயாரிப்பாளர் வட்டாரத்தில்
வாரிசு படம் பற்றிய அறிவிப்பு வெளியானது முதல் இன்றுவரை ஊடகங்களில் அப்படம் பற்றிய பரபரப்பு செய்திகள் தொடர்ந்து வெளிவருவதற்கு தயாரிப்பாளர் தில்ராஜ் திட்டமிட்டு செயலாற்றி வருகிறார்.
தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் கருணையில்லாமல் அதிக திரையரங்குகளில் படத்தை ரீலீஸ் செய்ய முடியாது என்பது தெரிந்தும் படத்தின் தமிழக உரிமையை விஜய் ஆலோசனையின் அடிப்படையில் அவருக்கு நம்பிக்கைக்குரிய லலித்குமாரை வாங்க வைத்தார்.
ரெட் ஜெயண்ட் விரும்பி கேட்ட படம்” வாரிசு“. அதனை அவர்களுடன் நெருக்கமான வணிக உறவில் இருக்கும் லலித்குமார் தமிழக உரிமையை வாங்குவார் என்பது எவரும் யூகித்திருக்க முடியாது.
ஏனென்றால் ரெட் ஜெயண்ட் மூவீஸ் துணிவு படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுவதால் வாரிசு படத்திற்கு அதிகமான திரையரங்குகள் கிடைக்காது என்பது தெரியும்.
அதனை எளிதாக சமாளிக்ககூடிய சாதுர்யம், வலிமை லலித்குமாருக்கு மட்டுமே உண்டு. மாஸ்டர் படத்தின் தயாரிப்பு, வெளியீட்டை கொரோனா நெருக்கடியில் பதட்டமின்றி சமாளித்தவர் லலித்குமார்.
அதனால்தான் வாரிசு படத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை அவரிடம் வழங்கினார் தில்ராஜு.
அதோடு, அவர் தமிழ்நாட்டில் விஜய்தான் நம்பர் ஒன் நடிகர். அவர் நடித்துள்ள வாரிசு படத்திற்கு போதுமான திரையரங்குகள் கிடைக்கவில்லை. இது சம்பந்தமாக உதயநிதியை சந்தித்து பேச உள்ளேன் என்று கூறும் வரை தமிழ்நாட்டில் “துணிவு” படத்திற்கு தான் அதிக திரையரங்குகள் என்கிற நிலை இருந்தது.
ஆனால் அவரது பேட்டிக்கு பின் எல்லாமே மாறியது. ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு தமிழகத்தின் பிரதான விநியோக பகுதிகளான சென்னை, செங்கல்பட்டு, கோவை, வட ஆற்காடு, தென்னாற்காடு பகுதிகளில் திரையரங்கை ஒப்பந்தம் செய்யும் பொறுப்பு ரெட் ஜெயண்ட் மூவிஸ்க்கு வழங்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.
இதனால் மற்ற ஏரியாக்களான மதுரை, நெல்லை, சேலம், திருச்சி ஏரியாக்களிலும் வாரிசு படத்திற்கு போதுமான திரையரங்குகள் கிடைக்க காரணமானது.ரெட் ஜெயண்ட் மூவீசுடன் லலித்குமாருக்கு சுமுக வணிக உறவு இருப்பதால் இதனை சாத்தியமாக்கினார் தில்ராஜு.
விஜய் மனம் குளிர அவர் கொண்டாடும் கிறிஸ்துமஸ் பண்டிகை பரிசாக சென்னை நேரு விளையாட்டு அரங்கில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்தி விஜய் கால்ஷீட் ஒன்றையும் பெற்று விட்டார்.
அதனால்தான்”வாரிசுக்கு” வாழ்த்துகள் வாரிசு – 2 எப்போது சார் என தில் ராஜீவை பார்த்து விஜய் கேட்டுள்ளார்.
வாரிசு படத்தை தொடர்ந்து புதிய படத்திற்கு ரெட் ஜெயண்ட்டிடம் போக வேண்டுமே என வாரிசு படத்தை திரையிட முதலில் தயங்கிய திரையரங்கு உரிமையாளர்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் லலித்குமார் மூலம் தனுஷ் நடித்த “வாத்தி”படத்தை தமிழ்நாட்டில் வெளியிட ஏற்பாடு செய்துள்ளார் தில்ராஜு.
அரசியல் சதுரங்க விளையாட்டுக்கு சற்றும் குறைவில்லாத வகையில் “வாரிசு” படத்தின் மூலம் சினிமா வியாபார அரசியலை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ளார் தில் ராஜு.
காரைக்கால் சிறுவன் கொலை: குற்றப்பத்திரிக்கையில் முக்கிய தகவல்!
விஜய் சொன்ன ’இன்ஸ்பிரேசன்’ ஸ்டோரி… அரங்கை அதிர வைத்த ரசிகர்கள்!
கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – மனநிலையை மாற்றுமா உணவுகள்?