விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தின் 2ஆவது பாடல் இன்னும் 2 நாட்களில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குநர் வம்சி பைடிபலி இயக்கத்தில் நடிகர் விஜய் வாரிசு படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
பிரகாஷ் ராஜ், பிரபு, சரத் குமார், குஷ்பு, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்.
பொங்கல் கொண்டாட்டமாக தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.
வாரிசு படத்தில் விஜய் பாடிய முதல் பாடல் “ரஞ்சிதமே” வெளியாகி ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பைப் பெற்றது. மேலும் இப்பாடல் யூடியூப்பில் 60 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
இந்நிலையில் வாரிசு படத்தின் அடுத்த அப்டேட் இன்று (டிசம்பர் 2) மாலை 6.30 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்தது.
வாரிசு படத்தின் அப்டேட் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது அப்டேட் வெளியாகியுள்ளது.
அதன்படி, படத்தின் 2வது பாடல் டிசம்பர் 4 ஆம் தேதி மாலை 4 மணிக்கு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஞ்சிதமே பாடல் மாஸ் ஹிட் கொடுத்ததால் 2வது பாடலும் அதே போல் மாஸாக இருக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மோனிஷா
கோவில்களில் செல்போனுக்கு தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கொடநாடு வழக்கு: அரசு தரப்பில் வைத்த முக்கிய கோரிக்கை!