தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் – மகாலட்சுமி திருமணம் குறித்து மறைமுகமாக நடிகை வனிதா விஜயகுமார் பதிவிட்டுள்ள கருத்து இணையத்தில் பரவி வருகிறது.
தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரனுக்கும், பிரபல சின்னத்திரை நடிகை மகாலட்சுமிக்கும் கடந்த 1ம் தேதி திருப்பதியில் திருமணம் நடைபெற்றது.
எந்த முன்னறிவிப்பும் இன்றி இருவரது குடும்பத்தினர் மட்டுமே பங்கு கொண்ட திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ஒரே நாளில் டிரெண்டாக மாறியது.
இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் என்பதால் ரவீந்தர் – மகாலட்சுமி குறித்த திருமண செய்திகள் அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது.
இவர்களது திருமணத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் சமூகவலை தளங்கள் மற்றும் தொலைகாட்சி மூலம் வாழ்த்து கூறிவருகின்றனர்.
இந்நிலையில் விஜயகுமாரின் மகளும், நடிகையுமான வனிதா, தனது சமையல் பதிவுகளுக்கு இடையே ரவீந்தரின் திருமணத்தை மறைமுகமாக சாடும் விதத்தில் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
அவரது ட்விட்டரில் பதிவில், ”மற்றவர்களின் வாழ்க்கையைப் பற்றி கவலைப்பட முடியாத அளவுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பிஸியாகவும் இருக்கிறேன். கர்மா ஒரு பிட்ச்… அவளுக்கு திருப்பி கொடுக்க தெரியும் .. நான் அவளை முழுமையாக நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
வனிதாவை சாடிய ரவீந்தர்!
இந்த பதிவில் யாருடைய பெயரையும் வனிதா குறிப்பிடவில்லை என்றாலும், தற்போது திருமணம் செய்துள்ள தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனை தான் மறைமுகமாக தாக்கியுள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு நடிகை வனிதா, பீட்டர் பாலை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். அதுகுறித்து ரவீந்தர் கடுமையான கருத்துகள் முன்வைத்து சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டு வந்தார்.
இந்நிலையில் ரவீந்தர் – மகாலட்சுமி இருவரும் இரண்டாவது திருமணத்தில் இணைந்துள்ள நிலையில், நடிகை வனிதா விஜயகுமார் வெளியிட்டுள்ள கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
’’அந்த மகாலட்சுமியே கிடைச்சா…’’ திருமணம் குறித்து ரவீந்திரன்