வாணி ஜெயராம் மறைவு: இறுதி ஊர்வலம் துவங்கியது!
மறைந்த பிரபல மூத்த பின்னணி பாடகி வாணி ஜெயராமின் உடல் அவரது நுங்கம்பாக்கம் இல்லத்தில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டு இறுதி ஊர்வலமாக பெசண்ட் நகர் மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
பாடகி வாணி ஜெயராம் நேற்று உயிரிழந்தார். அவரது மறைவிற்கு திரை உலகினரும், அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் இன்று காலை வாணி ஜெயராம் உடலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதனை தொடர்ந்து மதியம் 1 மணியளவில் வாணி ஜெயராமின் உடல் அவரது நுங்கம்பாக்கம் இல்லத்தில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டு பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
இறுதி ஊர்வலம் துவங்குவதற்கு முன்பாக அவரது உடலுக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.
செல்வம்
தஞ்சையில் பயிர்கள் சேதம்: அமைச்சர் ஆய்வு!
பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட்: யாருக்கு வெற்றி வாய்ப்பு?