’தென்பாண்டி சீமையிலே’ மெட்டில் பாரதிராஜாவுக்கு கவி பாடிய வைரமுத்து
மருத்துவமனையிலுள்ள இயக்குநர் பாரதிராஜாவை ‘தென்பாண்டி சீமையிலே’ பாடல் மெட்டில் கவிதை பாடி கவிஞர் வைரமுத்து இன்று (ஆகஸ்ட் 1) உற்சாகமூட்டியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பாடல்கள் கோலோச்சிய காலத்தில் இரு பெரும் ஜாம்பவான்களாக வலம் வந்தவர்கள் இசைஞானி இளையராஜாவும், கவிப்பேரரசு வைரமுத்துவும்.
இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய பாடல்கள் இன்றளவும் ரசிகர்களின் பேவரைட் ப்ளே லிஸ்ட்-ல் இருக்கும்.
ஆனால், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். பின்னர், இருவரும் இணைந்து ஒன்றாக படங்களில் பணியாற்றவில்லை.
இந்நிலையில் தான் வைரமுத்து இன்று (ஆகஸ்ட் 1) வெளியிட்டுள்ள ட்விட்டர் (எக்ஸ்) பதிவு ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அதில், மருத்துவமனையிலுள்ள இயக்குநர் பாரதிராஜாவை இளையராஜாவின் ‘தென்பாண்டி சீமையிலே’ பாடலின் மெட்டில் ’எழுந்து வா இமயமே’ என்று கவிதை பாடி கவிஞர் வைரமுத்து உற்சாகமூட்டியுள்ளார்.
https://twitter.com/Vairamuthu/status/1686203725034262528?s=20
இந்த கவிதையை கேட்டு, “மருத்துவர்கள், விஞ்ஞானிகளை விட கவிஞர்களின் இதுபோன்ற வரிகளே தன்னை உற்சாகப்படுத்துகிறது” என்று பாரதிராஜா நெகிழ்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
மாஸ்கோ மீது தாக்குதல்: போரை நிறுத்தும் முயற்சியில் சவுதி அரேபியா!
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!