ரகுமான் பெயர் சொல்லாமல்… வைரமுத்துவின் வஞ்சப்புகழ்ச்சி?

Published On:

| By christopher

மே மாதம் படத்தில் இடம்பெற்ற ‘என் மேல் விழுந்த மழைத்துளியே’ பாடல் உருவான விதம் குறித்து வைரமுத்து இன்று (அக்டோபர் 7) பதிவிட்டுள்ளார்.

1992 ஆம் ஆண்டு  வெளியான ரோஜா படம் மூலம் இணைந்தது மணி ரத்னம் – வைரமுத்து – ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி.

முதல் படத்திலேயே இசைக்கும், பாடல்வரிகளுக்கும் என தேசிய விருது உட்பட பல விருதுகளை வென்றுள்ளது.

அதன்பின்னர் வைரமுத்து எழுதிய நூற்றுக்கணக்கான பாடல்கள் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளிவந்து ரசிகர்களை இன்றளவும் ஈர்த்து வருகிறது.

கடைசியாக 2018ஆம் ஆண்டு மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த செக்க சிவந்த வானம் திரைப்படத்திற்கு பிறகு இந்த கூட்டணி சேர்ந்து பணிபுரியவில்லை.

குறிப்பாக கல்கி எழுத்தில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வைரமுத்து பாடல்கள் எழுதாதது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது மிக சொற்பமான படங்களுக்கு பாடல்கள் எழுதி வரும் வைரமுத்து, தான் பாடல் எழுதியபோது நடந்த சுவாரசிய சம்பவங்களை பகிர்ந்து வருகிறார்.

அதன்படி, தற்போது 1994ம் ஆண்டு வெளியான மே மாதம் திரைப்படத்தில் இடம்பெற்ற என் மேல் விழுந்த மழைத்துளியே’ பாடல் உருவான விதம் குறித்து வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் வினீத் கதாநாயகனாக நடித்த இப்படத்தை வீனஸ் பாலு இயக்கி இருந்தார். வினீத்துடன் சோனாலி, மனோரமா எஸ். என். லட்சுமி, சத்யப்ரியா, சில்க் ஸ்மிதா, மௌனிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருந்தார்.

இந்த நிலையில், மலர்ந்தும் மலராத பாதி மலர் போல… என்ற பாடலே இந்தப்படத்தில் இடம் பெற்ற என் மேல் விழுந்த மழைத்துளியே பாடலின் மூலப்பாடல் என்று தெரிவித்துள்ளார்.

அதில், “கோவளம் கடற்கரை

ஒரு காதல் பாடலுக்காக
நானும் இசையமைப்பாளரும்
கடலலையில் கால்நனைத்து
நடந்துகொண்டிருக்கிறோம்

ஒரு
பழைய பாடலைப் பாடிக்காட்டி
இந்த லயத்தில்
இசையமைக்கலாம் என்றேன்

அதன் அடிநாதத்தில்
என் வரிகளுக்கு
மெட்டமைத்தார்

பாடல் கேட்டதும்
என் உடலே கடலில்
நனைந்துவிட்டது

இதோ
அந்தக்
காதல் பாடலும்
மூலப் பாடலும்” என்று அவர் அதில் பதிவிட்டு இருக்கிறார்.

இதனையடுத்து காதல் கவிந்துருகும் அந்த பாடல் தங்களது பேவரைட் என்றும், அதன்பின்னால் இப்படி ஒரு சுவாரசிய தகவல் உள்ளதா என்று வியந்து வருகின்றனர்.

வேறு சிலர், அப்போதே ஏ.ஆர்.ரகுமான் காப்பி கட் பண்ணிவிட்டார் என்பதை இப்போது வைரமுத்து போட்டுக்கொடுக்கிறாரோ? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சிறுவர்களுக்கு கேரவனை சுற்றி காட்டிய சூரி..! வைரல் வீடியோ.!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share