நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்: ரசிகர்களின் விமர்சனம் இதோ!

சினிமா

கிட்டத்தட்ட 5 வருட இடைவேளைக்கு பிறகு நடிகர் வடிவேலு மீண்டும் திரையில் தோன்றியிருக்கும் திரைப்படம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்.

சிவலிங்கா மற்றும் மெர்சல் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்த வடிவேலுவுக்கு, இம்சை அரசன் 24-ம் புலிகேசி படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்னையால் தயாரிப்பாளர் சங்கம் அவருக்கு ரெட் கார்டு கொடுத்திருந்தது. இதனால் அவர் வேறு எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார். பின்னர் கடந்த வருடம் வடிவேலுவிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.

இதையடுத்து இயக்குநர் சுராஜின் இயக்கத்தில் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

‘தலைநகரம்’ ‘ மருதமலை’ உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குநர் சுராஜ் இந்தப்படத்தை இயக்கி இருக்கிறார். சந்தோஷ் நாரயணன் இசையமைத்திருக்கும் இந்தப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கிடையே இன்று(டிசம்பர் 9 ) வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தைப் பார்த்த ரசிகர்கள், ட்விட்டரில் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம்.

வைகை புயல் வடிவேலு திரும்பி விட்டார். நாய் கடத்தல்காரராக, பல கடத்தல்களை செய்கிறார். 2வது பாதி வேறு திருப்பத்தை எடுக்கிறது என்று ரமேஷ் பாலா ட்வீட் செய்துள்ளார்.

உண்மையிலேயே வடிவேலு ரசிகை. ஆனால் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ஒரு ஏமாற்று வேலை. ஆரம்ப அரை மணி நேரம் சாதுவானது. ஒரு சில நகைச்சுவைகள் பரவாயில்லை. அதுவும் இல்லையெனில், படம் ஒன்றுமே இல்லை.

திரைப்படங்களில் அவரது திறமை குறைவாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்டு மனம் உடைகிறது. அவர் ஏன் தனக்குத் தகுதியானதை விட குறைவான விஷயங்களில் திருப்தி அடைகிறார் என்று தெரியவில்லை என கீர்த்தனா தனது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

அதி கனமழை, பலத்த காற்று: மாண்டஸ் புயல் எச்சரிக்கை!

திமுகவுக்கு ஒரு நியாயம் அதிமுகவுக்கு ஒரு நியாயமா?– தங்கமணி கேள்வி!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *