மாமன்னன் படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இந்த படத்திற்கு பிறகு வடிவேலு மற்றும் பகத் பாசில் ஆகிய இருவருக்கும் தமிழில் அதிகமான பட வாய்ப்புகள் வரத் தொடங்கிவிட்டது.
சமீபத்தில் பகத் பாசில் மற்றும் வடிவேலு ஆகிய இருவரும் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த படத்தை பிரபல தமிழ் தயாரிப்பாளரான ஆர்.பி. சௌத்ரியின் சூப்பர் குட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 98வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படத்தை மலையாள திரைப்பட இயக்குனர் சுதீஷ் சங்கர் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கின்றார். இந்த படம் பகத் பாசில் மற்றும் வடிவேலு ஆகிய இருவரின் சாலை பயணம் குறித்த படமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று (ஜனவரி 22) இந்த படத்தின் தலைப்பு வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு “மாரீசன்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் படத்திற்காக பூஜை போடப்பட்டு பணிகள் தொடங்கிவிட்டது.
டைட்டில் அறிவிப்பை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் ஒரு தார் சாலையில் மான் தலையின் உருவ வடிவம் இருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் “இன்னைக்கு வேட்டை ஆரம்பம்” என்று வாக்கியமும் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாமன்னன் படத்திற்கு பிறகு மீண்டும் பகத் பாசிலும் வடிவேலும் இணைந்து நடிக்கும் படம் என்பதால் மாரீசன் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு இப்போதே அதிகரித்துவிட்டது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் 16வது முறையாக நீட்டிப்பு!
”அயோத்தி ராமர் கோயிலுக்குப் பிறகு என் அடுத்த இலக்கு என்ன?” : மோடியின் முழு உரை!